Viral Video: விமானத்தில் ‘டிக்கெட் இன்றி’ பயணம் செய்த பாம்பு; நடுவானில் ஏற்பட்ட பதற்றம்!

ஏர் ஏசியா ஏர்பஸ் A320-200 விமானம் கோலாலம்பூரில் இருந்து மலேசியாவின் தவாவ் நகருக்கு சென்று கொண்டிருந்த போது, நடுவானில் விமானத்தில் பாம்பு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 13, 2022, 11:01 AM IST
  • விமான பயணத்தில் ‘ஸ்னேக் ஆன் எ பிளேன்’ திரைப்படம் போன்ற சம்பவம்.
  • இணைய உலகம் ஆச்சர்யங்களையும், வியப்புக்களையும் அள்ளித் தருவதில் யாரையும் ஏமாற்றுவதே இல்லை.
  • விமானம் தரையில் நின்று கொண்டிருக்கும் போது உள்ளே புகுந்திருக்கலாம்.
Viral Video: விமானத்தில் ‘டிக்கெட் இன்றி’ பயணம் செய்த பாம்பு; நடுவானில் ஏற்பட்ட பதற்றம்!  title=

இணைய உலகம் ஆச்சர்யங்களையும், வியப்புக்களையும் அள்ளித் தருவதில் யாரையும் ஏமாற்றுவதே இல்லை. தினம்தோறும் இணைய உலகில் பகிரப்படும் வீடியோக்களில் சில, காண கிடைக்காத பொக்கிஷங்களாக இருக்கின்றன் என்றால் மிகையில்லை. அந்த வகையில் விமானம் ஒன்று நடு வானில் பறக்கையில் அதில், பாம்பு ஒன்று  கண்பிடிக்கப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்று  நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் விமான பயணத்தில் ‘ஸ்னேக் ஆன் எ பிளேன்’ திரைப்படம் போன்ற சம்பவம் நிஜ வாழ்க்கையில் நடந்தால் நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள்? இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களும் அதே எண்ணத்தில் திகைத்துப் போனார்கள். ஹனா மொஹ்சின் கான் என்ற வர்த்தக விமானி, ட்விட்டரில் ஒரு அதிர்ச்சி வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு விமானத்தில் ஒரு பாம்பு இருப்பதைக் காணலாம்.

மேலும் படிக்க | Viral Video: 10வது மாடியிலிருந்து தொங்கும் குழந்தை; மனதை பதற வைக்கும் வீடியோ!

அந்த வீடியோவில், விமானத்தின் விளக்குகள் ஒளிரும் பகுதியில் பாம்பு ஒன்று சிக்கியிருப்பதைக் காணலாம். ஏர் ஏசியா ஏர்பஸ் A320-200  விமானம் கோலாலம்பூரில் இருந்து மலேசியாவின் தவாவ் நகருக்கு சென்று கொண்டிருந்தது. பாம்பு பயணிகளின் சாமான்களில் இருந்து தப்பியிருக்கலாம் என சிலர் கருத்து கூறினர். சிலர்  விமானம் தரையில் நின்று கொண்டிருக்கும் போது உள்ளே புகுந்திருக்கலாம் என்றனர். 

வைரலான வீடியோவை இங்கே காணலாம்:

மேலும் படிக்க | Viral Video: படம் எடுத்து ஆடும் நாகப்பாம்பு ஜோடி வீடியோ -Watch

நடுவானில் பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருப்பி விடப்பட்டது. எனினும் தரையிறங்கும் வரை விமான பயணிகள், விமான குழுவினர் மத்தியில் பதற்றம் நிலவியது.

மேலும் படிக்க | Viral Video: 'காதலை' வெல்ல இரு ராஜநாகங்களுக்கு இடையில் நடக்கும் கடுமையான போர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News