மாடல்-நடிகர் மிலிந்த் சோமன் (Milind Soman) தனது பிறந்தநாளை முன்னிட்டு கோவாவில் ஒரு கடற்கரையில் நிர்வாணமாக ஓடும் படத்தை வெளியிட்ட சில நாட்களில், ஆபாசத்தை ஊக்குவித்ததாக போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சோமனுக்கு எதிராக கோவா சூரக்ஷா மன்ச் (GSM) வியாழக்கிழமை புகார் அளித்தது, அதைத் தொடர்ந்து கோவா போலீசார் நடிகர் மீது வழக்கு பதிவு செய்தனர். மிலிந்த் சோமன் தனது 55 வது பிறந்தநாளில் இந்த படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார், அந்த நிர்வாண புகைப்படத்தை அவரது மனைவி அங்கிதா கொன்வார் எடுத்துள்ளதாக அவர் போட்டோவில் குறிப்பிட்டுள்ளார்.


 


ALSO READ | திருமணம் ஆகாத 90's குழந்தையா நீங்கள்... உங்களுக்காக ஒரு செய்தி!


 



 


"தெற்கு கோவாவில் ஒரு கடற்கரையில் நிர்வாணமாக ஓடியதாகவும், பின்னர் அந்த படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியதாகவும் சோமனுக்கு எதிராக சூரக்ஷா மன்ச் என்ற அமைப்பு புகார் அளித்தது" என்று ஒரு அதிகாரி செய்தி நிறுவனத்திற்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.


இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 294 (பொது இடத்தில் ஆபாசமான செயல்) மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 (ஆபாசப் பொருள்களை மின்னணு வடிவத்தில் வெளியிடுதல் மற்றும் பரப்புதல்) ஆகியவற்றின் கீழ் காவல்துறையினர் சோமனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


இதேபோன்ற வழக்கில், நடிகை-மாடல் பூனம் பாண்டே (Poonam Pandey Video) மற்றும் அவரது கணவர் ஆகியோர் தென் கோவாவின் கனகோனா நகரில் உள்ள ஒரு அணையில் ஆபாச வீடியோவை படம்பிடித்ததாக கைது செய்யப்பட்டனர். பின்னர் தம்பதியருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.


 


ALSO READ | "ஆபாச" வீடியோ சர்ச்சை குற்றச்சாட்டில் பூனம் பாண்டேவை கைது செய்த கோவா போலீஸ்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR