பிரசவம் என்பது ஒரு பெண்னின் மறு பிறவிக்கு சம்ம என இப்போது வரை ஒரு கூற்று உண்டு, ஆனால் இந்த வீடியோ அந்த பிம்பத்தினை உடைத்துவிட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஒரு வாரமாக இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் பிரசவ அறையில் காத்திருக்கும் பெண்மனி ஒருவர் தனது மருத்துவருடன் சேர்ந்து நடனம் ஆடி அசத்தியுள்ளார். தில் தட்கனே தோ என்னும் பாலிவுட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘Girls like to swing’ என்னும் பாடலுக்கு கர்ப்பிணி, மருத்துவர் என இருவரும் இணைந்து நடனம் ஆடியுள்ளனர்.


பஞ்சாப் மாநிலம் லூதியான மருத்துவமனையில் நிகழ்ந்த இச்சம்பவத்தினை, Harsh Goenka என்னும் ட்விட்டர் பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இந்த வீடியோ தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெரும்பாலானோர் மருத்துவர்கள் எப்படி இதற்கு அனுமதிக்கலாம் என கேள்வி எழுப்ப, இந்த வீடியோவில் நடனமாடிய கர்ப்பிணி பெண் சங்கிதா சர்மா தானாக முன் வந்து விளக்கம் அளித்துள்ளார்.



தான் ஒரு நடன இயக்குநர் எனவும், தனது கர்ப காலத்திலும் இவர் தொடர்ந்து நடனம் ஆடியதால் தனக்கு இது இயல்பான விஷயம் தான், ஆனால் புதியவர் பரிசோதிக்கும் பட்சத்தில் விபரீதமாக முடியலாம் எனவும் எச்சரித்துள்ளார்.