திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களின் மறைவிற்கு தமிழில் வருத்தம் தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 27-ஆம் நாள் நள்ளிரவில் உடல்நிலை கோளாறு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணியளவில் கலைஞர் காலமானார். இதனையடுத்து மறைந்த தலைவர் கருணாநிதி அவர்களுக்கு தேசிய தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சென்னை ராஜாஜி அரக்கில் வைக்கப்பட்டுள்ள கலைஞரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...



"தன்னிகரற்ற தலைவரும், பழுத்த நிர்வாகியும், மக்கள் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தினேன். கலைஞர் கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார்." என பதிவிட்டுள்ளார்.