வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்த்தால் அவைகள் வீட்டில் ஒருவராக மாறிவிடும். வீட்டார்களுடனே உறங்குவது, அவர்களுடன் விளையாடுவது என உணர்வு ரீதியாக நெருக்கமாகும் தன்மை உடையவை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுமட்டுமின்றி வீட்டினை பாதுகாப்பது, தனக்கு நெருக்கமாக உணர்பவர்களை பிறர் தொட்டால்கூட கோபித்துக்கொள்வது, எதற்காவாவது அடம் பிடிப்பது என அலாதி கொடுக்கக்கூடியவை.


மேலும் படிக்க | 30 நொடிகளில் 3 ஆந்தைகளை கண்டறிய வேண்டும்; சாவலை ஏற்க தயாரா...


அதிலும் நாய்க்குட்டிகள் இருந்தால் அந்த வீட்டில் உருவாகும் மகிழ்ச்சியின் அளவை கணக்கிடவே வேண்டாம். அவ்வளவு க்யூட்டாக, சுறுசுறுப்பாக அவைகள் செய்யும் செயல்களை காலம் உள்ளவரை ரசித்துக்கொண்டே இருக்கலாம்.


உதாரணமாக கண்ணாடியில் அதன் உருவத்தை அதுவே பார்த்துக்கொண்டு செய்வதறியாது நிற்பது போன்ற செயல்கள் மனிதர்களை கவரக்கூடியவை.


மேலும் படிக்க | தன் மகனை ஆசையாய் கொஞ்சும் புலி! வைரலாகும் வீடியோ!


அந்தவகையில் தற்போது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அந்த வீடியோவில், கண்ணாடி டேபிள் மீது பந்து ஒன்று இருக்கிறது.


 



அதனைப் பார்த்த நாய்க்குட்டி டேபிளுக்கு கீழே நின்றுகொண்டு அந்த பந்தை கவ்வ முயல்கிறது. அது முடியாததால் தனது உரிமையாளரை சோகமாக பார்க்கும் அந்த நாய்க்குட்டி தனது முன்னங்கால்களை வைத்து அந்த பந்தை பற்ற முயல்கிறது. அதுவும் முடியாததால் அந்த டேபிளையே சுற்றிசுற்றி வருகிறது.


மேலும் படிக்க | கோபத்தில் குஸ்தி போடும் சிங்கங்கள்: இவ்வளவு சீற்றம் உடம்புக்கு நல்லதில்ல காட்டு ராஜா


தற்போது இந்த நாய்க்குட்டியின் க்யூட் வீடியோ சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை அதிகம் கவர்ந்து பகிரப்பட்டுவருகிறது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR