கோபத்தில் குஸ்தி போடும் சிங்கங்கள்: இவ்வளவு சீற்றம் உடம்புக்கு நல்லதில்ல காட்டு ராஜா

பலம் வாய்ந்த விலங்கு என்பதால் சிங்கத்தைப் பார்த்து பிற விலங்குகள் விலகிப் போகலாம். ஆனால், ஒரு சிங்கம், மற்றொன்றைப் பார்த்து பயப்படுமா? கோபம் வந்தால் மோதலும் தீவிரமாகிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 4, 2022, 02:01 PM IST
  • சீற்றத்தால் சீறிப்பாயும் சிங்கங்கள்
  • கோபத்தில் குஸ்தியில் இறங்கிய காட்டு ராஜாக்கள்
  • சிங்கங்களின் சீற்றம் தணிவது எப்போது
கோபத்தில் குஸ்தி போடும் சிங்கங்கள்: இவ்வளவு சீற்றம் உடம்புக்கு நல்லதில்ல காட்டு ராஜா title=

புதுடெல்லி: பலம் வாய்ந்த விலங்கு என்பதால் சிங்கத்தைப் பார்த்து பிற விலங்குகள் விலகிப் போகலாம். ஆனால், ஒரு சிங்கம், மற்றொன்றைப் பார்த்து பயப்படுமா? கோபம் வந்தால் மோதலும் தீவிரமாகிறது.

இணைய உலகில், அன்றாடம் பகிரப்படும் பல்வேறு வகையான வீடியோக்களில், திகிலை உண்டாக்கும் காட்டு விலங்குகள் வேட்டையும் அவற்றின் உக்கிரமான தாக்குதல் தொடர்பான வீடியோக்களும் பலரால் பார்க்கப்பட்டு வைரலாகின்றன.

சில வீடியோக்களை பார்த்தலே திகிலை உண்டாக்க கூடியதாக இருக்கும். பல சிரிப்பை வரவழைக்கும். ஆனால் சண்டையை பக்கத்தில் நின்று பார்க்கச் சொன்னால், துண்டைக்காணோம் துணையைக் காணோம் என்று அனைவரும் ஓடிவிடுவார்கள்.

மேலும் படிக்க | Viral Video: அஸ்ஸாமில் சாலையை ஹாய்யாக கடந்து சென்ற பெரிய்ய்ய்ய மலைப்பாம்பு..!!

ஆனால் அண்மையில் இணையத்தை கலக்கி வரும் ஒரு வைரல் வீடியோவில் ஒன்றல்ல, இரண்டல்ல, 5 சிங்கங்கள் மோதிக் கொள்வதை மக்கள் நிதானமாக நின்று பார்க்கிறார்கள். என்ன ஆச்சரிமாக இருக்கிறதா? சிங்க வீடியோ இதோ...

ஆனால் சண்டை எதற்கு என்றுதான் தெரியவில்லை. கேள்விக்கான பதிலைத் தேடித்தேடிய பலமுறை ஆயிரக்கணக்கானவர்கள் இந்த வீடியோவை பார்த்துவிட்டார்களாம். இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்காவது காரணம் தெரிகிறதா? பார்த்து சொல்லுங்கள்... 

இது மிருகக்காட்சி சாலையில் எடுக்கப்பட்ட வீடியோ. அங்கு சிங்கங்கள் தனியாக வைக்கப்பட்டுள்ள பகுதியில் தான் அமர்க்களமாக போர்க்கள வைபவம் அரங்கேறியிருக்கிறது. அதனால்தான், தடுப்புக்கு அப்பால் நின்ரு சண்டையை மக்கள் வேடிக்கைப் பார்க்கின்றனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | குரலால் காட்டை உலுக்கும் காட்டு ராஜா

இந்த வைரல் வீடியோவில் கடுமையாக ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் சிங்கங்களைப் பார்க்கலாம். கோபம் வந்துவிட்டால், சமாதானம் ஆகும் வரை சீறும் பண்பை சிங்கங்கள் விட்டுவிடுமா என்ன?

சிங்கம் வேறு எந்த மிருகத்தையும் தாக்குவதை பார்த்திருக்கலாம். ஆனால் சிங்கங்கள்  தங்களுக்குள் சண்டையிடுவது  மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வனவிலங்குகள் தொடர்பான காணொளியில்  ஐந்து சிங்கங்கள் சண்டையிடும் வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது.

வைரலாகும் இந்த வீடியோ Wild_animal_shorts என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில்  பதிவேற்றப்பட்டுள்ளது. சிங்கங்களுக்கு இடையிலான இந்த சண்டையை யார் இணையத்தில் பதிவேற்றம் செய்தனர் என்பது தெரியவில்லை.  

மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News