நாய்க்குட்டி செய்யும் Prank - வைரல் வீடியோ
![நாய்க்குட்டி செய்யும் Prank - வைரல் வீடியோ நாய்க்குட்டி செய்யும் Prank - வைரல் வீடியோ](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2022/06/17/232648-puppya.jpg?itok=WJ-XF7vZ)
நாய்க்குட்டி ஒன்று தன்னை வளர்ப்பவரை பயமுறுத்தி விளையாடும் வீடியோ வைரலாகியுள்ளது.
தற்போதைய உலகத்தில் அனைவருமே ப்ராங்க் செய்கிறார்கள். ப்ராங்க்கிற்கு என்று தனித்தனியே சேனல்களும் உருவாகியுள்ளன. சில ப்ராங்க்குகள் சிரிப்பை வரவழைத்தாலும் சில ப்ராங்க்குகள் எரிச்சலையும், ஆத்திரத்தையும் வரவழைக்கும். அதுபோன்ற ப்ராங்க்குகள் ஆபத்தையும் வரவழைக்கும்.
இங்கு நாய்க்குட்டி ஒன்று தன்னை வளர்ப்பவரை பயமுறுத்தி ப்ராங்க் செய்ய முயல்கிறது. நாய்கள் என்றாலே மனிதர்களுடன் சகஜமாக பழகக்கூடியவை.
மேலும் படிக்க | ஊஞ்சலாடப் போய் மல்லாக்க விழுந்த பெண்கள்: சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ
குறிப்பாக மனிதர்களுடன் பழகி பழகி ஏறத்தாழ மனிதர்கள் செய்யக்கூடியவற்றை செய்ய நாய்கள் முயலும். அப்படி அவை செய்யும்போதோ இல்லை செய்ய முயலும்போதோ ரசிக்கும்படியாக இருக்கும்.
அதிலும் நாய்க்குட்டிகள் இருந்தால் அதன் க்யூட்னெஸ் எப்போதும் ஓவர் லோடட்தான். அப்படி ஒரு நாய்க்குட்டி மனிதர்களின் செயலை செய்ய முயலும் வீடியோ வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் சுவர் ஓரமாக நாய்க்குட்டி தன்னை வளர்ப்பவர் வரும்வரை சுவருக்கு பின்னால் காத்திருக்கிறது. அருகில் வந்தவுடன் அவரை பயமுறுத்தும் தொனியில் பாய்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் நாய்க்குட்டியின் செயல் க்யூட்டாக இருக்கிறது என கூறி அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.
மேலும் படிக்க | DA Hike: தமிழக நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு 28 சதவிகிதமாக உயர்ந்தது அகவிலைப்படி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR