DA Hike: தமிழக நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு 28 சதவிகிதமாக உயர்ந்தது அகவிலைப்படி

தமிழக அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பினால் நியாய விலைக் கடைகளில் 22,510 பணியாளர்கள் மகிழ்ச்சி

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 17, 2022, 07:54 AM IST
  • ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28 சதவிகிதம் உயர்வு
  • தமிழக அரசு அறிவித்த சம்பள உயர்வு
  • நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்வு
DA Hike: தமிழக நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு 28 சதவிகிதமாக உயர்ந்தது அகவிலைப்படி title=

சென்னை: நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

அகவிலைப்படி என்பது பொருட்களின் விலையேற்றத்தை கணக்கிட்டு அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து கொடுப்பது ஆகும்.

முன்னதாக, ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் கடந்த 7, 8, 9 ஆம் தேதிகளில் சில கூட்டுறவு தொழிலாளர் சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 லட்சம் வரை கிடைக்க வாய்ப்பு

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் சிஐடியு உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு தொழிலாளர் சங்கங்கள், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்திருந்தன. 

இந்த நிலையில் தமிழக அரசு, ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28 சதவிகிதம் உயர்வு அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இவ்வாறு விரிவான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன: “கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 22.02.2021 முதல் ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14% அகவிலைப்படி பெற அனுமதிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு, இந்த காரணியில் உயர்வு சாத்தியம்

1.01.2022 முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசீலித்து 1.01.2022 முதல் நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 28% அகவிலைப்படி பெறவும், அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்களை பெறவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2,852 கட்டுநர்கள், என மொத்தம் 22,510 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்” என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

மேலும் படிக்க | PPF, NSC, SSY: சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு சூப்பர் செய்தி, வட்டி விகிதம் உயரும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News