அமெரிக்க யூடியூபரும், ரெப்டைல் ஜூ ப்ரீஹிஸ்டோரிக் இன்க் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜே ப்ரூவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டார், அதில் அவர் இரண்டு பெரிய மலைப்பாம்புகளுடன் இருக்கிறார். வீடியோவில் இருக்கும் இரண்டு பெரிய மலைப்பாம்புகளில் ஒன்று வெள்ளை, மற்றொன்று கருப்பு. இரண்டும் ஒன்றுக்கொன்று பின்பிணைந்து காணப்படுகின்றன. இந்த இரண்டு பாம்புகளுடன் அவர் இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இரண்டு மலைப்பாம்புகளும் மிகவும் நீளமாகவும், ராட்சத பாம்புகளாகவும் இருக்கின்றன. ஆனால் எந்தவித பயமும் இல்லாமல் அவர் இரண்டு பாம்புகளின் வால்களை பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார். இருந்தபோதும் அந்த பாம்புகள் அவரை விட்டு எங்கோ செல்ல முயற்சிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வைரல் வீடியோ: கடவுளே காப்பாத்திரு... எக்ஸாமில் சாமி கும்பிட்டு விடை எழுதும் சிறுவன்


இந்த வீடியோவை தன்னுடைய சோஷியல் மீடியாவில் போட்டிருக்கும் அவர், உங்களுக்கு பிடித்தமான எது ஒன்றையும் செய்ய தவறாதீர்கள் என தெரிவித்துள்ளார். அந்த வீடியோ கேப்சனில் அவர் எழுதியிருக்கும் பதிவில், இந்த வாழ்க்கை ஒரே ஒருமுறை மட்டுமே. ஒரு பழமொழி இருக்கிறது - நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள் என்று. அது நிதர்சனமான உண்மை. நீங்கள் இந்த வாழ்க்கையில் உங்களுடைய விருப்பத்தை கண்டுபிடித்து அதனை தேடும் வழியில் இறங்குங்கள். அதனை அனுபவிக்க முயற்சி செய்யுங்கள். அந்த பயணத்தில் வரும் யாவருக்கும் உதவி செய்யுங்கள். பிறருக்கு உதவி செய்வதை ஒருபோதும் நிறுத்திவிடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.



உங்கள் கனவுகளுக்காக ஆர்வமும் அர்பணிப்பும் அவசியம். அதனை நீங்கள் கொடுக்க தயாராக இருந்தால் இந்த வாழ்க்கை உங்களுக்கு அழகான விஷயங்களை கொடுக்க தயாராக இருக்கிறது என தெரிவித்துள்ளார். அதாவது அவருக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதையும், தன்னை பின் தொடர்பவர்களையும் அவ்வாறே செய்து வாழ்கையை அனுபவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் இந்த பதிவு இன்ஸ்டாகிராம் மற்றும் யூ டியூப்பில் வைரலாகியுள்ளது. 


வீடியோவை 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். மேலும் 162,000 பேர் அதை லைக் செய்துள்ளனர். அவர் கலிபோர்னியாவில் இருக்கும் விலங்குகள் அருங்காட்சியகத்தில் இந்த வீடியோவை எடுத்திருக்கிறார். அந்த மிருக காட்சி சாலையில் கவர்ச்சியான பாம்புகள் முதல் முதலைகள் வரை ஆமைகள் என பல விலங்குகள் இருக்கின்றன. 


மேலும் படிக்க | ‘பாம்போட க்ளோஸ் அப் தேவையா?’: கடித்து குதறிய பைதன், வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ