Chimpanzee Video: பூச்சிகளையே மருந்தாக்கும் சிம்பான்சி
சிம்பன்சி தங்கள் காயங்களில் பூச்சிகளை களிம்பு போல் தடவுகிறது, பல ஆராய்ச்சிகளுக்கு ஆதாரமாகும் வைரல் வீடியோ
பூச்சிகளையே காயங்களுக்கு மருந்தாக்கும் சிம்பன்சியின் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகிறது, சில புழுக்கள் காயத்தை சுத்தம் செய்யவோ அல்லது வலியைப் போக்கவோ உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
சிம்பன்சி தங்கள் காயங்களில் பூச்சிகளை களிம்பு போல் தடவுகிறது, வைரலாகும் வீடியோ பல ஆராய்ச்சிகளுக்கு ஆதாரமாக உள்ளது
தற்போது ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது. வைரலான வீடியோவில், ஒரு சிம்பன்சி தனது மகனின் காலில் பூச்சிகளைப் பயன்படுத்துவதைக் காணலாம். வைரல் வீடியோவில் காணப்பட்ட இந்த சிம்பன்சியை ஓஜோகா சிம்பன்சி திட்டத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, வயது வந்த சிம்பன்சி சுசி முதலில் ஒரு பறக்கும் பூச்சியைப் பிடித்து தனது குழந்தையின் காயத்தை ஆற்றுவதற்காக அதை வாயில் வைத்தது. அதன் பிறகு, சிறிது நேரம் அதை மென்று சாப்பிட்ட பிறகு, தாய் சிம்பன்சி அந்த பூச்சியை தனது குழந்தையின் காயத்தின் மீது தடவியது.
தாய் மருந்தாக பயன்படுத்திய பூச்சி எந்த வகை என்பதோ, அதுதொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.
விலங்குகள் பொதுவாக இயற்கையான முறையில் சிகிச்சை செய்துக் கொள்கின்றன. சில விலங்குகளுக்கு காயங்கள் ஏற்பட்டால், அவை தங்கள் காயங்களை நாக்கால் நக்குவதைக் காணலாம்.
மேலும் படிக்க | காதலை' வெல்ல நாகங்களுக்கு இடையில் நடக்கும் போர்
கரடிகள், குரங்குகள், மான்கள் போன்ற பல விலங்குகள், தங்கள் நோய்களை மருத்துவ தாவரங்களை சாப்பிட்டே சரி செய்துக் கொள்வதாக நம்பப்படுகிறது.
அதேபோல, காயத்தின் மீது புழுக்களைப் பயன்படுத்துவது பற்றி பேசும் ஆராய்ச்சியாளர்கள், இந்த புழுக்கள் காயத்தை சுத்தம் செய்யவோ அல்லது வலியைக் குறைக்கவோ உதவுலாம் என்று நம்புகிறார்கள்.
தற்போது புழுவை சிகிச்சையாக பயன்படுத்தும் சிம்பான்சியின் வீடியோ வைரலாக (Viral Video) பரவி வருவதை கண்டு பயனர்கள் மிகவும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
காடுகளில் கிடைக்கும் அனைத்தையும் சரியாகப் பயன்படுத்த காட்டு உயிரினங்களுக்குத் தெரியும் என்று பெரும்பாலான மக்கள் கூறுகிறார்கள்.
சிம்பன்சி என்பது வாலில்லா ஒரு மனிதக் குரங்கு இனம் ஆகும். சிம்பன்சியே மனிதனுக்கு மிக நெருங்கிய இனம் என பல மரபியல் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
வெவ்வேறு ஆய்வு முடிவுகளிடையே வேறுபாடுகள் இருப்பினும், மனிதர்களின் மரபணுக்களுக்கும் சிம்பன்சிகளில் டி.என்.ஏக்களுக்கும் இடையே பெருமளவு ஒற்றுமை காணப்படுகிறது.
மேலும் படிக்க | பேயை கல்யாணம் செய்யும் பாடகி! திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR