உலக வரலாற்றின் பொக்கிஷங்களைக் கொண்டிருக்கும் எகிப்து நாட்டில் செங்கடல் இருக்கிறது. இந்த செங்கடலில் இருக்கும் அதீத மீன்களினால், அதில் குளிக்கச் செல்பவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறன்றன. குறிப்பாக சுறா மீன்களின் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பலர் செங்கடலில் நீச்சலடிக்கும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள சென்று சுறாவுக்கு இரையாகி உயிரை விட்டிருக்கின்றனர். இதனால், அவ்வப்போது செங்கடல் கடற்கரையை அந்நாட்டு அரசு மூடி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும், சுறாக்களின் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அடேங்கப்பா..இது உலக மகா நடிப்பு டா சாமி! பாம்பின் வீடியோ வைரல்


இப்போதும் ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. எகிப்தின் ஹுர்காடா நகருக்கு அருகே செங்கடலில் நீந்திக் கொண்டிருந்த ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒருவர் Tiger Shark எனப்படும் சுறா மீனின் தாக்குதலுக்கு உள்ளானார். அவரை கொடூரமாக தாக்கிய அந்த சுறா மீன், இறுதியில் அவரை உயிருடன் விழுங்கியது. உயிரிழந்தவர் விளாடிமிர் போபோவ் என்ற ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இதனை அந்நாட்டில் உள்ள ரஷ்ய தூதரகம் உறுதி படுத்தியுள்ளது.


சுறா தாக்குதலுக்கு உள்ளாகி ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளதாகவும், சுறா மீன் அவரை உயிருடன் விழுங்கியதாகவும் எகிப்து அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் தாக்குதலுக்கு உள்ளாகும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலில் நீந்தும் அவரை விடாமல் துரத்தி சென்று தாக்கிய சுறா, அவரை கடலுக்குள் இழுத்துச் சென்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.



இந்த நிலையில், ரஷ்ய நாட்டை சேர்ந்தவரை கொன்ற அந்த சுறாவை அப்பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுறாவை மக்கள் பிடிக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஆனால், ரஷ்யாவை சேர்ந்தவரை கொன்ற சுறா தானா அது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


மேலும் படிக்க | வகுப்பில் பெண்ணை ப்ரொபோஸ் செய்த குரங்கு: வெக்கம் வெக்கமா வரும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ