சர்தார்ஜி வைரல் டான்ஸ் வீடியோ: கனடாவின் தெருக்களில் இந்திய இளைஞர்கள் ஆடுவதைப் பார்த்து அனைவரும் அசந்துப் போகின்றனர். பாம்பு டான்ஸ் ஆடும் இளைஞனின் நடனம் சமூக ஊடகங்களில் வைரலாகிறது. வைரலாகும் வீடியோவில், கலாய்க்கும் நெட்டிசன்களின் கமெண்டால் இன்ஸ்டாகிராம் பக்கம் கலகலக்கிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உண்மையில் அந்த இளைஞர் ஏன் அப்படி ஆடுகிறார் என்பது யாருக்குமே தெரியவில்லை. வைரலாகும் பாம்பு டான்ஸ் ஆடும் இளைஞர்களின் நடனத்தையும், அவர்களை சுற்றி நின்று, கட்டுப்படுத்த முயலும் இளைஞர்களின் முயற்சிகளுக்கும் லட்சக்கணக்கான லைக்குகள் கிடைத்துள்ளன. சாலையில் சர்தார்ஜி ஆடும் பாம்பு டான்ஸ் பார்க்க நீங்க ரெடியா?


இசைக்குழு இருந்தால் என்ன? மகுடி ஊதாவிட்டால் என்ன? தோன்றிவிட்டால் எங்களுக்கு தோன்றியதைத் தான் செய்வோம் என்று சொல்கிறார்களா இந்த இளைஞர்கள்? 


மேலும் படிக்க | பாம்புக்கு கிஸ் கொடுத்த நபர்: வியப்பில் நெட்டிசன்கள், வீடியோ வைரல் 


கனடாவின் தெருக்களில் நடைபெற்ற இந்த எதிர்பாராத டான்ஸ் காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது.



பொதுவாக பஞ்சாபி மக்கள் நடனமாடுவதில் விருப்பம் கொண்டவர்கள். அவர்களின் பாங்க்ரா நடனம் பிரசித்தி பெற்றது. ஏந்த ஒரு நிகழ்ச்சியிலும், அவர்கள் நடனமாடத் தயங்குவதில்லை.


மேலும் படிக்க | பல் தேய்க்கும்போது இந்த பந்தா தேவையா? பாம்புடன் சிறுமி அடிக்கும் லூட்டி!!


திருமணமோ அல்லது வேறு எந்த நிகழ்ச்சியோ, பஞ்சாபியர்களின் முதல் விருப்பம் பாங்க்ரா. ஆனால் தற்போது கனடாவின் சாலைகளில் வித்தியாசமான காட்சி காணப்படுகிறது. இங்கு பல சர்தார்ஜிகள் பாம்பு நடனம் ஆடுவதில் மும்முரமாக இருந்தனர்.


இந்த சூப்பர் டான்ஸ் காட்சியை சமூக வலைதளங்களில் யாரோ ஒருவர் அதனை சமூக ஊடகத்தில் பதிவிட்டதும், அது வைரலானது.


இந்த டான்ஸ் காட்சியைப் பார்த்ததும் அங்கே ஒரு மார்க்கெட் இடம் இருப்பது தெரிந்தது, சீக்கிய இளைஞர்கள் பலர் அங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் இசைக் குழுவும் இருப்பது தெரிகிறது.


மேலும் படிக்க | கண்ட்ரோல் பண்ண முடியாமல் தாத்தா ஆடிய பாம்பு டான்ஸ்: பட்டையை கிளப்பும் வைரல் வீடியோ


திடீரென்று அனைவரும் பாம்பு நடனம் ஆடத் தொடங்குகின்றனர். சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் மக்களும், நின்று இக்காட்சியைக் கண்டு களிக்கின்றனர். 


இந்த காணொளி கனடாவில் உள்ள டொராண்டோவை சேர்ந்தது என்பது அந்த காணொளியின் தலைப்பில் இருந்து தெரியவந்துள்ளது. சீக்கியர்களின் வித்தியாசமான இந்த நடனத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இது imjustbesti என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.


இதுவரை இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் பார்வைகள் வந்துள்ளன. நிமிடத்திற்கு நிமிடம் அது அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அது மட்டுமல்ல, ஏய் இது பாம்பு டான்ஸ்ப்பா! பாங்கரா இல்லை! கன்ஃப்யூஸ் ஆயிட்டீங்களா என பலர் கலாய்த்து கமெண்டும் போட்டு வருகிறார்கள்.


மேலும் படிக்க | ‘ப்பா..என்னா டிராபிக்கு’: சாலையை கடக்க தவிக்கும் பாம்பு, சிரிக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ