வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
சமூக ஊடக உலகில் தினமும் பல ஆச்சரியமான விஷயங்களை நாம் காண்கிறோம். இவற்றில் சில காட்சிகள் நம்மை முற்றிலும் வியக்கவைக்கும் வகையிலும், சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கின்றன. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பெண் மற்றும் பாம்பு தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.
அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் தனது கழுத்தில் சுமார் 7 அடி உயரமுள்ள பாம்பை மாட்டிக்கொண்டு பல் துலக்குவதை காண முடிகின்றது. ஆனால் பாம்பு தனது கழுத்தில் இருப்பதால் எந்த வித அச்சத்தையும் அந்த சிறுமியிடம் காண முடியவில்லை. மாறாக, படு கூலாக, ஸ்டைலாக அவர் ஆடிக்கொண்டே பல் துலக்குகிறார்.
மேலும் படிக்க | பாம்புக்கு கிஸ் கொடுத்த நபர்: வியப்பில் நெட்டிசன்கள், வீடியோ வைரல்
சிறுமியின் கழுத்தில் சுற்றியிருக்கும் பாம்பு
வைரலான இந்த வீடியோவில், ஒரு பெண் குளியல் தொட்டியில் நிற்பதையும் பிரஷ் செய்து கொண்டிருப்பதையும் காண முடிகின்றது. ஆபத்தான தோற்றமுடைய பாம்பை அவர் தனது கழுத்தில் சுற்றிக் கொண்டு, மிகுந்த மகிழ்ச்சியுடன் பல் துலக்கத் தொடங்குகிறார். சிறுமி லேசாக நடனமாடுவதையும் வீடியோவில் காண முடிகின்றது. பாம்பு தனது நண்பன் என்பதிலும், தனக்கு எந்தத் தீங்கும் செய்யாது என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகவும் தெரிகிறது.
திக் திக் பாம்பு வீடியோவை இங்கே காணலாம்
பாம்பு மற்றும் ஒரு சிறுமியின் இந்த வித்தியாசமான வீடியோ snakemasterexotics என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் இதுவரை கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். பலர் அந்த பெண்ணின் தைரியத்தை பாராட்டினாலும், சிலர் இந்த விஷப் பரீட்சை தேவை இல்லாத ஒன்று என்று எச்சரித்துள்ளார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ