‘ப்பா..என்னா டிராபிக்கு’: சாலையை கடக்க தவிக்கும் பாம்பு, சிரிக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ

Viral Snake Video: ஒவ்வொரு நாளும் பாம்புகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டு மிரட்டலாக உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 22, 2022, 02:43 PM IST
  • சாக்கடை ஜாலியிலிருந்து வெளிவந்த பாம்பு.
  • சாலையை கடக்க முயன்ற பாம்புக்கு வெற்றி கிடைத்ததா?
  • வைரலாகும் வீடியோ.
‘ப்பா..என்னா டிராபிக்கு’: சாலையை கடக்க தவிக்கும் பாம்பு, சிரிக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. பாம்புகளைக் கண்டாலே பெரும்பாலானோர் பதற்றமடைகின்றனர். சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் பாம்புகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டு மிரட்டலாக உள்ளது. இதில் நடுரோட்டில் உள்ள சாக்கடையில் இருந்து திடீரென பாம்பு ஒன்று வெளியே வருவதை காண முடிகின்றது. 

வெளியே வந்த நாகப்பாம்பு, சாலையில் ஆட்கள் வருவதையும் போவதையும் பார்க்கிறது. இதன் பிறகு வீடியோவில் நாம் காணும் காட்சி நம்ப முடியாத அளவில் உள்ளது. 

சாக்கடை ஜாலியிலிருந்து வெளிவந்த பாம்பு

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், சாக்கடையின் ஜாலியிலிருந்து  இருந்து பாதி உடலை வெளியே நீட்டி, பாம்பு ஒன்று அந்த வழியாக சாலையில் வருபவர்களையும், போகிறவர்களையும் பார்த்துக் கொண்டிருப்பதை காண முடிகின்றது. படம் எடுத்து நிற்கும் பாம்பு சாலையின் மறுபக்கம் போகும் எண்ணத்தில் உள்ளது. சிறிது நேரம் கழித்து, அது ஜாலியிலுந்து முழுமையாக வெளியே வந்து சாலையைக் கடக்கத் தொடங்குகிறது. ஆனால், அப்போது ஒரு கார் மிக வேகமாக வரவே, அது பயந்து மீண்டும் ஜாலியை நோக்கி ஓடுகிறது. 

மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள் 

பாம்பு சாலையை கடக்கும் வீடியோவை இங்கே காணலாம்: 

பாம்புகள் தொடர்பான பல வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், பாம்பு சாலையை கடக்கும் இப்படி ஒரு வீடியோவை யாரும் பார்த்திருக்க முடியாது. இந்த வீடியோ animalsinthenaturetoday என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏராளமான லைக்குகளும் வியூஸ்களும் வந்த வண்னம் உள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். ‘பார்த்து பா...பாம்பு ரோட் கிராஸ் செய்யுது’ என ஒருவர் வேடிக்கையாக எழுதியுள்ளார். ‘மனிதர்களுக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட பாம்பு’ என ஒருவர் பாம்புக்காக பரிதாபம் கொள்கிறார். 

மேலும் படிக்க | கரும்பு லாரியா? ஒரு டோக்கன் போட்டுட்டு போ..! யானையின் குறும்பு வீடியோ வைரல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News