வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைதளங்களில் இந்த நாட்களில் பல த்ரில் வீடியோக்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. பெரும்பாலான பயனர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் சமூக ஊடகங்களில் இப்படிப்பட்ட வீடியோக்களையே பார்க்க விரும்புகிறார்கள். இவற்றில் சுவாரஸ்யத்துடன் நம்மை சிலிர்க்க வைக்கும் பல விஷயங்களும் நடக்கின்றன. ஆனால், இவற்றில் ஆபத்தும் இருக்கின்றது என்பதையும் அனைவரும் நினைவில் கொள்வது நல்லதாகும். 


சமீபத்தில், இதேபோன்ற ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஜங்கிள் சஃபாரியை அனுபவிக்க வந்தவர்களை காட்டு யானை ஒன்று ஆத்திரத்துடன் தாக்க வரும் காட்சியை காண முடிகின்றது. இதைப் பார்த்து இணையவாசிகள் சற்று பயந்துதான் போகிறார்கள். 


பொதுவாக, மக்கள் வனவிலங்குகள் மீதுள்ள பற்று காரணமாக விடுமுறை நாட்களில் மலைப்பகுதிகள் அல்லது ஜங்கிள் சஃபாரிக்கு செல்வதுண்டு. இப்படிப்பட்ட நேரங்களில் சில சமயங்களில் விலங்குகளை நேருக்கு நேராக பார்க்கும்போது அவர்கள் அச்சத்தின் உச்சிக்கு செல்வதுண்டு. வனவிலங்குகளை கூண்டுகளில் பார்ப்பது வேறு, ஆனால், காட்டில் அவற்றின் இயற்கையான சூழலில் அவற்றை எதிர்கொள்வது மிக ஆபத்தானது. ஏனென்றால், அவற்றை மனிதர்கள் தாக்கக்கூடும் என்ற அச்சத்திலும் பதற்றத்திலும் அவை நம்மை தாக்க வாய்ப்புகள் உள்ளன. 


சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத் தான் காட்டுகிறது.  யானை ஒன்று ஜங்கிள் சஃபாரி செய்பவர்களின் வாகனத்திற்கு பின்னால் வேகமாகவும் கோவமாகவும் ஓடி வருவதை இதில் காண முடிகின்றது. 


இந்த வீடியோ இணையத்தில் பலரால் பார்க்கப்பட்டு வருகின்றது. இதில் வனப்பகுதியின் சாலை ஒன்றில்,  பயணிகள் நிறைந்த வாகனம் சென்றுகொண்டிருக்க, அருகில் ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவர் நடந்துகொண்டிருக்கிறார். அப்போது அங்கு ஒரு பெரிய யானை ஒன்று நிற்பது காணப்படுகிறது. 


மேலும் படிக்க | அம்மாடி.. செம அடி: வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை.. செருப்பாலயே அடித்த மாமனார், வைரல் வீடியோ


ஆத்திரத்தில் சுற்றுலா பயணிகளை தாக்கிய யானை


வைரலான இந்த வீடியோவில், ஆத்திரமடைந்த யானையிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஹெல்மெட் அணிந்த ஒருவர் ஓடுவதைக் காண முடிகின்றது. மறுபுறம், யானை தங்களை நோக்கி வருவதைப் பார்த்து, சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து கூச்சலிடுவதும், சத்தம் போடுவதும் கேட்கிறது. இதனால் யானை மேலும் கோபமடைந்தது. அப்போது, ​​டிரைவர் சரியான நேரத்தில் வாகனத்தை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து வாகனத்தை முன்னோக்கி நகர்த்துகிறார். அதன் பிறகு ஹெல்மெட் அணிந்திருந்த நபரின் பைக்கை நோக்கி யானை செல்வது தெரிகிறது.



பயனர்கள் சுற்றுலாப் பயணிகளை விமர்சித்தனர்


தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது பல சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. இந்த வீடியோ ட்விட்டரில் @WildLense_India என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. செய்தி எழுதும் வரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் இதை பார்த்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


வீடியோவைப் பார்த்த பயனர்கள் சத்தம் போட்டு யானைக்கு கோபமூட்டிய சுற்றுலாப் பயணிகளை விமர்சித்து வருகிறார்கள். ‘துளியும் பொறுப்பில்லாத பயணிகள் இவர்கள்’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். மற்றொரு பயனர், ‘வனவிலங்குகள் மீது இவர்களுக்கு மரியாதை இல்லை. இவர்கள் இப்படி செய்திருக்கக் கூடாது’ என்று கருத்து தெரிவித்துள்ளார். ‘விலங்குகளுக்கு ஆத்திரம் வரும் வகையில் நடந்துகொள்வது மிக ஆபத்தாக முடியலாம்’ என மற்றொருவர் எச்சரித்துள்ளார். 


மேலும் படிக்க | நீயா...நானா... ஒரு கை பார்த்துடுவோம்! சண்டையில் இறங்கிய எருமைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ