Viral Video: இணையத்தில் எண்ணிலடங்காத வீடியோக்கள் பகிரப்படுகின்றன. நாம் எதிர்பாராத பல விஷயங்கள் இந்நாட்களில் காணக்கிடைக்கின்றன. ஆச்சரியப்பட வைக்கும் பல வீடியோக்களை நாம் இங்கே தினமும் பார்க்கிறோம். சில நேரங்களில் நம்ப முடியாத பல வீடியோக்களையும் காண்கிறோம். இணையதளத்தில் பகிரப்படும் வீடியோக்களில் பாம்பு வீடியோக்கள் மிகவும் வைரலாகின்றன. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்றாலும் பாம்பு விடியோக்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் தற்போது, சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் ஒரு வீடியோவில் ஒரு ராட்சத மலைப்பாம்பையும் (Python) ஒரு பெண்ணையும் காண முடிகிறது. பார்த்தால் உடல் நடுக்கம் கொள்ளும் வகையில் இந்த வீடியோவில் பெண் மலைப்பாம்புடன் விளையாடுவதை பார்க்கலாம். வைரலான இந்த வீடியோவை பல்வேறு தளங்களில் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.


 


சில நொடிகள் உள்ள இந்த வீடியோவில் , ஒரு பெண் தனது தோள்களில் சுமார் 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பை சுமந்து செல்வதைக் காண முடிகின்றது. ராட்சத மலைப்பாம்பை சுமந்து கொண்டு திறந்த வெளியில் நடந்து செல்லும் அந்த நபரின் முகத்தில் அச்சம் என்ற உணர்வு பெயரளவிலும் இல்லை என்பது மிகவும் ஆச்சரியத்தை அளிக்கின்றது. இதில் வினோதமான விஷயம் என்னவென்றால், அந்த நபர் பாம்பை தனது தோளில் வைத்துக்கொண்டு செல்வதை மிகவும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறார் என்பதை அவரது முக பாவம்னையின் தெரிந்து கொள்ளலாம். அவர் முகத்தில் எந்த வித அச்சத்தையோ, பதட்டத்தையோ காண முடியவில்லை.


மலைப்பாம்பும் அந்த நபருக்கு எந்த வித பிரச்சனையையும் அளிக்கவில்லை என்பதையும் வீடியோவில் காண முடிகின்றது. தற்போது வைரலாகி வரும் வீடியோவில் அந்த மலைப்பாம்பு அவரது கட்டளைப்படி தோள்களில் வசதியாக ஊர்ந்து செல்கிறது. இதையெல்லாம் வீடியோவில் பார்ப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.


மேலும் படிக்க | Viral Video: மலை பாம்பை கபளீகரம் செய்யும் ராட்சஸ பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!


வைரலாகி வரும் மலைப்பாம்பு வீடியோவை இங்கே காணலாம்:


 



 


இந்த வைரலான வீடியோவை @thereptilezoo இன்ஸ்டாகிராம் கணக்கு பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ இதுவரை 2.3 மில்லியன் பார்வைகளையும், 150 ஆயிரம் லைக்குகளையும், ஏராளமான கருத்துகளையும் பெற்றுள்ளது.


மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ