வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் எது வைரல் ஆகும் என்பதை யாராலும் யூகிக்க முடியாது. சில சமயம் மிக சாதாரன விஷயங்கள் கூட இணையவாசிகளின் இதயத்தை கவர்ந்து வைரல் ஆவதுண்டு. கண்டிப்பாக ஏகப்பட்ட மக்கள் பார்ப்பார்கள் என நம்பி பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் அவ்வளவாக பார்க்கப்படாமல் போவதும் உண்டு. 


மிக எளிமையான ஆனால் சுவாரசியமான வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகியுள்ளது. இது ஒரு ஆட்டின் வீடியோ. இது வீடியோ பதிவு செய்வதற்காக நடத்தப்பட்ட சம்பவம் அல்ல. ஆட்டின் இயல்பான நடவடிக்கைகள் கேமராவில் பதிவாகி வைரல் ஆகியுள்ளன. இந்த வீடியோவை பார்த்த பயனர்களால் தங்கள் சிரிப்பை நிறுத்த முடியவில்லை. இந்த வீடியோ பயனர்களை மகிழ்வித்தது மட்டுமின்றி, அவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோவை பயனர்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள். 


பொதுவாக நாம் அனைவரும் ஆடுகளை சுற்றுப்புறத்தில் பார்த்திருப்போம். செம்மறி ஆடுகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் காணப்படுகின்றன. செம்மறி ஆடுகள் மந்தைகளில் வாழ்கின்றன. இவை தங்கள் மந்தைகளில் உள்ள ஆடுகளை காப்பாற்ற மற்ற பெரிய விலங்குகளுடனும் சண்டை போடுவதை நாம் பல வீடியோக்களில் பார்த்திருக்கிறோம். சில சமயம் தங்களுக்குள்ளும் சண்டை இட்டுக்கொள்ளும் செம்மறி ஆடுகள் தங்கள் தலைகளை முட்டிக்கொண்டு சண்டையிட்டு எதிராளியை தோற்கடிக்க முயல்கின்றன. 


தன்னையே தாக்கிக்கொண்ட செம்மறி ஆடு


வைரலாகி வரும் வீடியோவில் ஒரு செம்மறி ஆட்டை பார்க்கிறோம். இதன் செயலைப் பார்த்தால் இணையவாசிகளால் தங்கள் சிரிப்பை அடக்க முடியவில்லை. அந்த வீடியோவில், வீட்டின் பளபளப்பான கதவில் செம்மறி ஆடு தன் பிம்பத்தை பார்ப்பதை காண முடிகின்றது. தனது பிம்பத்தை பார்த்த அந்த ஆடு, அது வேறு ஆடு என நினைத்துக்கொள்கிறது. அதை எதிர்கொள்ள அது சில அடிகள் பின்வாங்கி விரைவாக கதவைத் தாக்குகிறது. அதன் பிறகும் அதற்கு ஒன்றும் புரியவில்லை. தன்னால் ஏன் அந்த ஆட்டை தாக்க முடியவில்லை என யோசிக்கின்றது. பிறகு அது மீண்டும் தாக்குதலுக்கு தயாராகி தாக்கிக்கொண்டே இருக்கிறது. 


மேலும் படிக்க | ஆத்தாடி..3 சிறுவர்களை விழுங்க முயற்சித்த நீர்யானை: ஷாக்கிங் வைரல் வீடியோ


கன்பியூஸ் ஆன செம்மறி ஆட்டின் வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோ 6 மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது


தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது பல சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் makasar_info என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. செய்தி எழுதும் நேரம் வரை, இந்த வீடியோ சமூக ஊடகங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் 6.3 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | அட கடவுளே!! நடுரோட்டில் தகராறு..ஆயுதமான மலைப்பாம்பு: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ