ஸ்கூல் மாணவர்களின் லூட்டிய பாருங்க..இப்படியா செய்றது..வீடியோ வைரல்
Funny Viral Video Of School Students: ஸ்கூல் காரிடோரில் மாணவர்களின் இந்த செயல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இன்றைய வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. அதன்படி சமீப காலமாக காதலர்களின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. அந்தவகையில் இங்கு பள்ளி மாணவ மாணவியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் இவர்கள் இருவரும் பேசிக்கொள்வதை நீங்கள் கேட்டால் உங்களின் சிரிப்பை அடக்க முடியாமல் போகலாம்.
மாணவனிடம் மாணிவி வைத்த கண்டிஷன்
இந்த வீடியோ பள்ளிக்கூடத்தில் எடுக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. அங்கு மாணவி ஒருவர் காரிடோரில் மொபைலைப் பயன்படுத்துகிறார். அப்போது பள்ளி மாணவன் ஒருவன் அவளை அணுகி தன் காதலை வெளிப்படுத்தினான். வீடியோவில் இதற்குப் பிறகு நடப்பதை நீங்கள் கண்டால் மிகவும் கடுப்பாகிவிடுவீர்கள். அதன்படி அந்த வீடியோவில் அந்த மாணவன் மானவியிடம் காதலை வெளிப்படுத்தினான், அதற்கு மாணவி "நீ குட்கா சாப்பிடுவதை நிறுத்தினால் உன்னை நான் காதலிப்பேன்" என்றார், அதற்கு அந்த மாணவன் முடியாது என்று கூறி முன்னே நடக்க தொடங்குகிறான். உடனே பின்னால் வந்த அந்த பெண் "குட்கா சாப்பிடுவதை நிறுத்தாத நீ என்னை காதலிப்பதையும் நிறுத்த மாட்டாய், அதனால் ஐ லவ் யு" என்கிறாள்.
மேலும் படிக்க | பைக் அலாரத்திற்கு நடனமாடும் சிறுவனின் வீடியோ.. ஆனந்த் மஹிந்திரா ரியாகஷன் வைரல்
பள்ளி மாணவர்களின் காதல் செய்யும் வீடியோவை இங்கே பார்க்கவும்
இந்த வீடியோவை அங்கு இருந்த சக மாணவர்கள் தங்களின் கேமராவில் படம் பிடித்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அத்துடன் இந்த வீடியோ bhutni_ke_memes என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. மேலும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
மேலும் படிக்க | இனி பாத்ரூம் போறச்சே உஷாரா இருங்கணுமே..நடுங்க வைக்கும் பாம்பின் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ