பைக் அலாரத்திற்கு நடனமாடும் சிறுவனின் வீடியோ.. ஆனந்த் மஹிந்திரா ரியாகஷன் வைரல்

பைக் அலாரத்திற்கு ஒரு சிறுவன் போட்டும் ஆட்டம் இணையத்தை கவர்ந்திருக்கிறது. பிரபல இந்திய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திராவும் இந்த வீடியோவை ரசித்துள்ளார்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 17, 2023, 02:45 PM IST
பைக் அலாரத்திற்கு நடனமாடும் சிறுவனின் வீடியோ.. ஆனந்த் மஹிந்திரா ரியாகஷன் வைரல் title=

பரந்து விரிந்த இந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம். அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் நம் மனதில் நீங்கா இடத்தை சில வீடியோக்கள் பிடிக்கும். அப்படி ஒரு வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.  

மேலும் படிக்க | தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பூனையை போராடி மீட்டு குரங்கு: நெகிழவைக்கும் வீடியோ

கார்கள் மற்றும் பைக்குகள் திருட்டுபோவதை தடுக்க அவற்றில் திருட்டு எதிர்ப்பு அலாரங்கள் அடிப்பது நாம் அனைவருக்கும் தெரியும். நாம் அனுமதி இன்றி ஒருவர் காரைத் தொடும் போது, தானாக அலாரம் ஒலிக்க தொடங்கும். அந்த அலாரங்கள் மிகவும் சத்தமாகவும் எரிச்சலூட்டும் விதமாக ஒலியை எழுப்புவதால், நமது கார் அல்லது பைக்கை யாரோ  தொட்டிருப்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த எச்சரிக்கை ஒலிக்கு ஒரு சிறுவன் ஆடும் நடனம் இணையத்தை கவர்ந்திருக்கிறது. வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் தெருவில் நிற்கும் சூப்பர் பைக் ஒன்றை எட்டி உதைக்கிறான்.

அந்த நேரத்தில் பைக்கில் இருந்து எச்சரிக்கை அலாரம் ஒலிக்க துவங்குகிறது. அந்த ஒலிக்கு ஏற்றவாறு அந்த சிறுவன் வேடிக்கையாக நடனமாட துவங்குகிறான். அவரின் நடனம் பார்பவர்கள் சிரிப்பில் ஆழ்த்தும் வகையில் வேடிக்கையாக உள்ளது. சிறிது நேரத்தில் அந்த எச்சரிக்கை ஒலி அனைந்ததும் தனது பொருட்களை கையில் எடுத்துகொண்டு வீட்டிற்கு செல்கிறான். 

இந்த வீடியோ இணையதளத்தில் விரலாக பரவி வருகிறது. பிரபல இந்திய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திராவும் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளார். சிறுவனின் நடனத்தை பார்த்து தன்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை என்றும் வேடிக்கையாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை இதுவரையில் சுமார் 14.5K பயனர்கள் ரீ-ட்விட் செய்துள்ளனர். மேலும், 60.7 K பயனர்கள் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவிற்கு பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். 

மேலும் படிக்க | இனி பாத்ரூம் போறச்சே உஷாரா இருங்கணுமே..நடுங்க வைக்கும் பாம்பின் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News