வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. மனித உணர்வுகளையும், சாகசங்களையும் வெளிக்காட்டும் பல வீடியோக்களும் அவ்வப்போது பகிரப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் பகிரப்படும் பல வீடியோக்கள் நாம் மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் உள்ளன. தாயன்பு என்பது உலகில் என்றென்றும் நிலையாக இருக்கும் சில விஷயங்களில் ஒன்றாகும். ஒரு தாயின் அன்புக்கு இணையாக வேறு எதுவும் இருக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு தாய் தனது குழந்தைக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்.


தாயன்பின் சக்தியை எடுத்துக்காட்டும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. ஆனால், மனம் திடமாக உள்ளவர்கள் மட்டுமே இதை பார்ப்பது நல்லது. இதில் வரும் காட்சிகள் மனதை உலுக்கும் வகையில் உள்ளன. இந்த வீடியோவில், விளையாடிக் கொண்டிருக்கும் போது, ​​ஒரு சிறு குழந்தை படிக்கட்டில் இருந்து கீழே விழத் தொடங்குகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, குழந்தையின் தாயின் கண்கள் உடனடியாக அதன் மீது விழுகின்றன. உடனடியாக தாய் தன் குழந்தையை காப்பாற்றிய விதம் ஆச்சரியமாக உள்ளது. இந்த காட்சி முழுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. வீடியோவைப் பார்த்த பயனர்கள் அந்தப் பெண்ணை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


குழந்தையை காப்பாற்றிய தாய் 


இந்த வைரலான வீடியோவில், லிப்டில் ஒரு பெண் குழந்தையுடன் அடுத்த மாடிக்கு வருவதைக் காண முடிகின்றது. அந்த தளத்தில் அந்த பெண்ணின் அலுவலகம் இருப்பதாகத் தெரிகிறது. லிப்டின் அருகில் படிக்கட்டுகள் உள்ளன. படிக்கட்டுகளின் மேல் கைப்பிடியில் அதிக இடைவெளி உள்ளது. குழந்தை அதன் அருகில் சென்று விளையாடிக்கொண்டிருக்கும் போது, அந்த இடைவெளியில் தன் சமநிலையை இழக்கிறது. அடுத்த கணம் நேராக கீழே விழத் தொடங்குகிறது. ஆனால், தாயன்பின் ஒரு சான்றாக, இதை சரியான நேரத்தில் குழந்தையின் தாய் கவனித்து விடுகிறார். உடனே அவர் துள்ளிக் குதித்து குழந்தையின் காலைப் பிடித்துவிடுகிறார். இதனால் குழந்தை கீழே விழாமல் காப்பாற்றப்படுகின்றது. சில நொடிகளில் பலர் அங்கு வந்து சேர்ந்து குழந்தையை மேலே இழுத்து விடுகின்றனர். 


மேலும் படிக்க | இந்த கலர் ல காக்கா பார்த்துருக்கீங்களா? வியக்க வைக்கும் வைரல் வீடியோ


மனதை பதபதைக்க வைக்கும் வீடியோவை இங்கே காணலாம்:



இந்தக் காட்சியைப் பார்த்தான் நம் இதயம் ஒரு கணம் நின்றுபோகும். இந்த வீடியோ ட்விட்டரில் @OTerrifying என்ற அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. தலைப்பில், "ஒரு தாயின் நம்பமுடியாத பிரதிபலிப்பு திறனை பாருங்கள்.. வியக்க வைக்கும் வகையில் குழந்தை கீழே விழாமல் அவர் காக்கிறார்” என இதில் எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு 5.8 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்கள் கிடைத்துள்ளன. இணைய பயனர்கள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | டீச்சரம்மாவின் நாய்னா சும்மாவா? படிச்சு அப்படியே செய்யும் நாயின் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ