கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 27-ஆம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


இந்நிலையில், ‘காலா’ திரைப்பத்தில் இடம்பெற்றுள்ள 14 வினாடிகள் கொண்ட சண்டைக்காட்சி ஒன்று இணையதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்க்கான காரணத்தை குறித்து படக்குழுவினர் விசாரித்து வருகின்றனர்.