வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்கள் மற்றும் வினோதமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கழுதைக்கு மேல் மனிதர்கள் அமர்வதையும் பொருட்களை ஏற்றிச்செல்வதையும் பார்த்துள்ளோம். ஆனால், ஒரு மனிதன் தனது முதுகில் கழுதையை ஏற்றிச்செல்வதை கண்டதுண்டா? சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், இப்படிப்பட்ட ஒரு காட்சியை காண முடிகின்றது. ஒருவர் கழுதையை முதுகில் ஏற்றிக்கொண்டு பேருந்தில் ஏறுவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வெளியானதை அடுத்து, நெட்டிசன்கள் கமெண்ட் பாக்ஸில் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மனிதனின் முதுகில் கழுதை


வியக்க வைக்கும் இந்த வீடியோவில், பேருந்தில் இருக்கையை பிடிக்க பயணிகள் வேகமாக ஏறுவதை காண முடிகின்றது. சில பயணிகள் இருக்கை கிடைக்காததால் பஸ்சின் மேற்கூரையில் ஏறுகின்றனர். இதற்கிடையில் ஒரு நபர், தனது கழுதையுடன் அங்கு வருகிறார். ஏணியின் உதவியுடன் பேருந்தின் மேற்கூரையில் ஏறத் தொடங்கினார். அவர் கழுதையை முதுகில் ஏற்றியிருக்கிறார். அந்த வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  எனினும் எங்களால் இதை உறுதிபடுத்த முடியவில்லை. 


மேலும் படிக்க | குடிபோதையில் ஆசாமி தனது பைக்கில் செய்ய செயல்: வீடியோ வைரல்


வியக்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்: 



சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது @HasnaZarooriHai என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பயனர்கள் சிரிக்கும் ஈமோஜியை அதில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு ஏராளமான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 


‘இது என்ன இங்கு தலைகீழாக நடக்கிறது?’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். மற்றொரு பயனர், ‘இவர் ஒரு சூப்பரான முதலாளி. கழுதையை குழந்தை போல பார்த்துக்கொள்கிறார்’ என எழுதியுள்ளார். 


மேலும் படிக்க | அச்சச்சோ..செம கியூட், வகுப்பறையில் சுட்டிக் குழந்தையின் வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ