மாஸ்டர் பிளான் போட்டு தப்பித்த பசுமாடு: பல்பு வாங்கிய சிங்கங்கள், வைரல் வீடியோ

Animal Viral Video: இந்த வீடியோவை பார்த்தால், இதில் நடப்பதை யாராலும் நம்ப முடியாது. சிங்கங்களிடமிருந்து புத்திசாலித்தனத்துடன் தப்பிக்கும் பசுமாட்டின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 20, 2022, 11:54 AM IST
  • பசியுடன் வந்த சிங்கங்கள்.
  • பிளான் போட்டு தப்பித்த மாடு.
  • வைரலாகும் வீடியோ.
மாஸ்டர் பிளான் போட்டு தப்பித்த பசுமாடு: பல்பு வாங்கிய சிங்கங்கள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

சமூக ஊடகங்களில் நாம் காணும் விலங்குகளின் பல வீடியோக்கள் சல சமயங்களில் நம்மை அதிகப்பட்ச ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத பல அதிசயங்களை இவற்றில் காண்கிறோம். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

பசியோடு இருக்கும் இரண்டு சிங்கங்களை பசு ஒன்று எதிர்கொள்வதை இந்த வீடியோவில் காண்கிறோம். இந்த வீடியோவின் துவக்கத்திலேயே நமது மனம் பதபதைக்கிறது. சிங்கங்கள் அந்த பசுவை என்ன பாடு படுத்துமோ என நாம் நினைக்கிறோம். ஆனால், நமக்கு ஆச்சரியமே காத்துக்கொண்டிருக்கிறது.

சாமர்த்தியமாக தப்பிய மாடு

பசித்த சிங்கங்கள் சுவரில் வளையம் கொண்டு கட்டப்பட்டிருந்த பசுமாட்டின் அருகில் வந்தவுடன் அந்த மாடு உடனடியாக தான் தப்பிக்க ஒரு திட்டத்தை தீட்டுவதை காண முடிகின்றது. சிங்கங்கள் அதனை தாக்க வந்த உடனேயே பசு, தனது கொம்பால் அவற்றின் மீது தாக்குதல் நடத்தத்  தொடங்குகிறது. 

மேலும் படிக்க | ப்ளீஸ்! எனக்கு ஊசி போடாதீங்க.. மருத்துவரிடம் கெஞ்சும் நாயின் க்யூட்டான வீடியோ!

மாட்டின் கொம்பால் ஆபத்து வரக்கூடும் என்பதை உணர்ந்த சிங்கங்கள், அதற்கு பின்னால் சென்று தாக்க முயற்சிக்கின்றன. ஆனால், சாமர்த்தியமான மாடு, சுவரோடு ஒட்டி நின்றுகொண்டு, பின்புறத்திலிருந்தும் தன்னை பாதுகாத்துக் கொள்கிறது. இதைக் கண்ட சிங்கங்கள் மீண்டும் மாட்டை முன்பக்கமாக தாக்க வருகின்றன. வீடியோவில் காணப்படும் இந்த காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் அழ்த்தும் வகையில் உள்ளது. மாறி மாறி, பசுமாடு பல வித உத்திகளை பயன்படுத்தி தன்னை காத்துக்கொள்கிறது. இற்றுதியில், சிங்கங்கள் பசுமாட்டுடன் தோற்றுத்தான் போகின்றன. 

பசு மற்றும் சிங்கங்களின் ஆச்சரியமளிக்கும் விடியோ இங்கே காணலாம்: 

பசுக்கள் மற்றும் சிங்கங்களின் இந்த வீடியோ சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் பரவலாகப் பார்க்கப்படுகிறது. இது இன்ஸ்டாகிராமில் animals_powers என்ற பக்கத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டிகளை அளித்து வருகிறார்கள். 

‘எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், புத்திசாலிக்கு முன்னால் தோற்றுதான் ஆக வேண்டும்’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். மற்றொரு பயனர், ‘புத்திசாலி பசுமாட்டுக்கு சபாஷ்!!’ என பசுவை பாராட்டியுள்ளார்.

மேலும் படிக்க | அம்மானா சும்மாவா: பாம்பை பதம் பார்த்த கோழி, ஆச்சரியத்தில் நெட்டிசன்கள், வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News