‘அப்படி என்ன உனக்கு கோவம்?’: தூங்கிய நபரை புரட்டி எடுத்த குரங்கு, வைரல் வீடியோ
Monkey Attack Video: குரங்குகள் தொடர்பான லட்சக்கணக்கான வீடியோக்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால், ஒரு குரங்கு இத்தனை ஆக்ரோஷமாக ஒருவரை தாக்கும் இந்த வீடியோ மிக அதிர்ச்சியாக உள்ளது.
வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் வைரலாகி வருகின்றன. இவற்றில் காணப்படும் வித்தியாசமான பாணிகளே இதற்கு முக்கிய காரணமாகும். குரங்கின் குறும்பை காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. குரங்கின் வீடியோக்கள் சில வேடிக்கையாக இருந்தாலும், பல வீடியோக்களை காண மிக அச்சமாகவும் இருப்பதுண்டு.
தற்போதும் குரங்கு ஒன்று செய்யும் அட்டகாசத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. இதை பார்த்தால் நம்மால் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை. இந்த வீடியோவில் ஒரு குரங்கு ஒரு நபரின் அறைக்குள் வந்து அந்த நபரை தாக்குகிறது. அந்த நபர் மீண்டும் மீண்டும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் தப்பிக்க முடியவில்லை.
தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது தாக்குதல் செய்த குரங்கு
ஒரு நபர் தனது அறையில் அயர்ந்து தூங்குவதை வீடியோவின் துவக்கத்தில் காண முடிகின்றது. ஆனால், அறையின் கதவு திறந்திருப்பதை போல தோன்றுகிறது. அதை சாதகமாக பயன்படுத்தி, குரங்கு நபரின் அறைக்குள் நுழைகிறது. ஆனால், அறைக்குள் நுழைந்த குரங்கு தனது அட்டகாசத்தை துவக்குகிறது. அது அவரது போர்வையை இழுக்கத் தொடங்குகிறார்.
அதுமட்டுமின்றி குரங்கு அந்த நபரை அடிக்கவும் தொடங்குகிறது. தூக்க கலக்கத்தில் இருக்கும் அந்த நபருக்கு முதலில் எதுவும் புரியவில்லை. ஆனால் பின்னர் அவர் சுதாரித்துக்கொண்டு தன் அருகில் வைத்திருந்த குச்சியை எடுத்து குரங்கை அடிக்கத் தொடங்குகிறார். சிறிது நேரத்தில் சிலர் அந்த அறைக்குள் வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கும் அந்த குரங்கின் அருகில் வர தைரியம் இல்லை.
பாடாய் படுத்திய குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்:
குரங்கைப் பார்த்தால், அதன் கோவத்தை பார்த்தால், அதற்கு அந்த நபர் மீது கடுமையான கோவம் உள்ளது என்பது தெரிகிறது. சந்தர்ப்பம் கிடைத்தவுடன் அது அவரை பழிவாங்க வந்துவிட்டது. குரங்குகள் தொடர்பான லட்சக்கணக்கான வீடியோக்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால், ஒரு குரங்கு இத்தனை ஆக்ரோஷமாக ஒருவரை தாக்கும் இந்த வீடியோ மிக அதிர்ச்சியாக உள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் rishbkaushik என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை லட்சக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ