ஷ்ஷ்.. யாரும் பாக்காதீங்க, உள்ள பூனை குளிக்குது: வைரல் வீடியோ

Cat Bathing Video: பூனை ஒன்று குதூகலமாக குளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது. இது மிகவும் ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 29, 2023, 02:43 PM IST
  • விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
  • இதை பார்த்தால் நமக்கும் அப்படி செய்ய வேண்டும் போலவே தோன்றுகின்றது.
ஷ்ஷ்.. யாரும் பாக்காதீங்க, உள்ள பூனை குளிக்குது: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

கோடை காலம் வந்தாலே பலருக்கு கொண்டாட்டம்தான். நாள் முழுதும் தண்ணீரில் நனைந்துகொண்டே இருக்கலாம் என்றே தோன்றும். மேலும், குளிக்கச்சென்றால் கண்டிப்பாக விரைவில் குளித்துவிட்டு வர தோன்றாது. சில்லென்று தண்ணீருக்கு அடியில் அனைவருக்கும் சுகமாக இருக்கும். கோடைகாலத்தின் பல வேடிக்கையான வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

இந்த உணர்வு மனிதர்களுக்கானது மட்டுமல்ல. விலங்குகளுக்கும் இதே எண்ணம் இருப்பதுண்டு. பல விலங்குகள் குழாய்களுக்கு அடியில் அமர்ந்து குளியலை ரசிக்கும் பல வீடியோக்களை நாம் பார்த்துள்ளோம். இப்போதும் அது போன்ற ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. இதை பார்த்தால் நமக்கும் அப்படி செய்ய வேண்டும் போலவே தோன்றுகின்றது. 

பூனைகள், குறிப்பாக வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள் அவ்வளவு எளிதாக குளிக்க ஒப்புக்கொள்வதில்லை. அதுவும் ஷவரின் கீழ் நின்று பூனை குளிப்பதெல்லாம் நடக்கவே நடக்காது என்பது பூனை வளர்ப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இந்த வீடியோவில் காணப்படும் பூனை இதற்கு விதிவிலக்காக உள்ளது. 

மேலும் படிக்க | என்ன கொடுமடா இது..முதலிரவு வீடியோ ஷேர் செய்த ஜோடி..வைரல் வீடியோ

பூனை ஒன்று அட்டகாசமாக குளியல் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது. இதை பார்க்கும் பல இணையவாசிகளுக்கு இந்த வீடியோ மிகவும் பிடித்து விட்டது. இதை பலர் லூப்பில் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறார்கள். 

பூனையின் அட்டகாசமான வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த வீடியொ மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அதுவும் பூனை இவ்வளவு ஆர்வமாக குளிப்பது ஆச்சரியமாக உள்ளது. பூனையின் மிக வித்தியாசமான இந்த வீடியோவுக்கு பல ரசிகர்கள் உருவாகி வருகிறார்கள். இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வைரலாகி வருகின்றது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | மலைப்பாம்புடன் ஒன் டூ ஒன் போட்ட உடும்பு... யார் பெரிய ஆளுனு அடிச்சு காட்டு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News