பரமக்குடி அருகே பிடிபட்ட மலைப்பாம்பு! வனத்துறையிடம் ஒப்படைப்பு வீடியோ வைரல்

Python Video Viral: பரமக்குடி அருகே பிடிபட்ட மலைப்பாம்பு! வனத்துறையிடம் ஒப்படைப்பு வீடியோ வைரல்... பார்த்தவர்களுக்கு ஏற்பட்ட பயத்தை வீடியோவாக பார்க்கலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 29, 2023, 11:46 PM IST
  • ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மலைப்பாம்பு
  • பிடிபட்ட மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு
  • மூட்டையில் கட்டப்பட்ட பாம்பு
பரமக்குடி அருகே பிடிபட்ட மலைப்பாம்பு! வனத்துறையிடம் ஒப்படைப்பு வீடியோ வைரல் title=

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பிடிபட்ட மலைப்பாம்பை பத்திரமாக வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பரமக்குடி அருகே உரப்புலி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் செங்கல் சூலையில் பாம்பு ஒன்று புகுந்துள்ளதாக பரமக்குடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்தனர்.

தீயணைப்புத் துறையின் அலுவலர் குணசேகரன் தலைமையில் சென்ற தீயணைப்புத் துறையினர் அங்கு இருந்த 15 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை ஊர் மக்கள் உதவியோடு பத்திரமாக பிடித்தனர்.

மேலும் படிக்க | Viral Video: நீயா... நானா... ஒரு கை பார்த்துடுவோம்! சண்டையில் இறங்கிய யானைகள்!

பின்னர் 15 அடி நீள மலைப்பாம்பை வனத்துறை அலுவலர் பால் பாண்டியிடம் ஒப்படைத்தனர். இவ்வகையான பாம்புகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடப்படும் என அப்போது வனத்துறையினர் தெரிவித்தனர்.

பெரும்பாலும் மலைப் பகுதிகளில் மட்டுமே வாழக்கூடிய இந்த வகை பாம்புகள் பரமக்குடி பகுதியில் பிடிபட்டதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

மேலும் படிக்க | Viral Video: சூரிய நமஸ்காரம் செய்யும் சிறுத்தை! இணைவாசிகளை கவர்ந்த வீடியோ!

மேலும் படிக்க | மலைப்பாம்புடன் ஒன் டூ ஒன் போட்ட உடும்பு... யார் பெரிய ஆளுனு அடிச்சு காட்டு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News