பயணங்கள் என்றும் வித்தியாசமான அனுபவங்களை தரக்கூடியவை. அதிலும் கடல் பயணத்தில் இயற்கை பல ஆச்சரியங்களையும் அற்புதங்களையும் வைத்திருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயணம் மேற்கொள்வதன் பயன், நாம் தினசரி வாழ்க்கையில் பார்க்காத அனுபவிக்காத அனுபவங்களை கொடுப்பதில் சார்ந்திருக்கிறது. வழக்கமான பயணத்திற்கும் சாகச பயணத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது.


வழக்கமான உல்லாச சுற்றுலாப் பயணத்தில் த்ரில்லிங்கான அனுபவம் ஏற்பட்டால் அது வரம் என்றே சொல்லலாம். அது வீடியோவாக பதியப்பட்டு சமூக ஊடகத்தில் பகிரப்பட்டால், அந்த வித்தியாசமான அனுபவத்தை பல லட்சக்கணக்கானவர்கள் பார்த்து மகிழ்கின்றனர்.


மேலும் படிக்க: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!


அப்படிபப்ட்ட பல விஷயங்களை நமக்கு இணைய உலகம் வைத்திருக்கிறது. அவற்றில் பலநம்மை வியப்பில் மட்டுமல்ல அதிர்ச்சியில் ஆழ்த்தகின்றன. பயத்தில் உறைய வைக்கக் கூடிய ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு அந்த அனுபவத்தை நாம் நேரிலேயே அனுபவித்த உணர்வை ஏற்படுத்துகிறது.  


இணைய உலகில், நகைச்சுவை, நடனம், வேடிக்கையான நிகழ்வுகள் போன்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும், விலங்குகளின் வீடியோக்கள் தான் அதிக அளவில் வைரலாகின்றன.


ஆபத்தான விலங்குகளின் வீடியோக்கள் மிகவும் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அதற்கு காரணம் அச்சம் தான். அதிர்ச்சித் தரும் சம்பவங்களாக இருந்தாலும் அவற்றை சமூக ஊடகங்களில் வீடியோவாக  பார்த்தால் பயம் கொடுக்காது என்பதால் சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் வீடியோக்கள் பெரும்பாலும் வைரலாகின்றன.


மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு


அப்படிப்பட்ட வீடியோக்களில் எதிர்பாராமல் கடலில் துள்ளி குதிக்கும் திமிங்கலத்தின் வீடியோ வைரலாகிறது. துள்ளி குதித்து ஸ்டண்ட் அடிக்கும் திமிங்கலத்தின் இந்த வீடியோ உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறதா? இல்லை அதிர்ச்சி ஏற்படுத்துகிறதா?



உல்லாசமாக பயணத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென திமிங்கலத்தின் துள்ளி குதிக்கும் காட்சி தண்ணீரை பீய்ச்சியடித்து அதிர்வலைகளை உருவாக்குகிறது.


மேலும் படிக்க | சீண்டியவரின் அந்தரங்க உறுப்பை பதம் பார்த்த பாம்பு வீடியோ வைரல்


கப்பலில் இருப்பவர்களுக்கு ஒரு சில நொடிகளே அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், எதிர்பாராத அற்புதமான அந்த காட்சி வீடியோ மூலமாக பதிவாகி சமூக ஊடகங்கள் வாயிலாக அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.


சமூக ஊடகங்களில் பார்த்து ரசிக்கும் நமக்கே த்ரில்லிங்கை கொடுக்கும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் உணர்வு எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்? கற்பனைகளுக்கு பஞ்சமில்லை என்றால் எப்படி வேண்டுமானாலும் யோசிக்கலாம்.


யாருடைய கற்பனை எப்படியிருந்தாலும் திமிங்கலத்தின் இந்த ஸ்டண்ட் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.


மேலும் படிக்க | Whale Ambergris: வைரத்தை விட மிக மதிப்பு மிக்கது திமிங்கிலத்தின் வாந்தி..!!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR