விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஊழியரை, அதிகாரி ஒருவர் எட்டி உதைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசிக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், ஆண்டாள் கோவில், சக்கரத்தாழ்வார் சன்னதி, கோபுரவாசல் மற்றும் அலுவலகப் பணிகளுக்காகச் செயல் அலுவலர் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மல்லபுரம் தெரு பகுதியில் வசித்து வருபவர் கர்ணன். இவர் ஆண்டாள் கோவிலில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். 


மேலும் படிக்க | ’சோதிக்காதீங்கடா.....சோதீக்காதீங்க’ நாயின் மைண்ட்வாய்ஸ் வைரல் வீடியோ


இருப்பினும், இவருக்கு ஒரு சில அதிகாரிகள் கடுமையான பணிச்சுமை தருவதாகவும், இதனால் ஏற்கனவே உடல் குறைபாடுள்ள தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தார். இது தொடர்பாகச் செயல் அலுவலரிடம் புகார் அளித்தும் கூட, வேண்டுமென்றே தனக்கு இரவு பணி வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 


இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் அதிகாரிகள் பணியாட்களைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பதாகவும் பெரும்பாலான பணியாளர்கள் அதிகாரிகளுக்குப் பயந்துகண்டு வெளியில் சொல்லாமல் உள்ளதாகவும், நாள்தோறும் இதே நிலை நீடிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


இந்த சூழ்நிலையில் கோவில் கணக்கர் சுப்பையா என்பவர் பணியாட்கள் இருக்கும்போது கர்ணனை எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. செயல் அலுவலர், பணியாளர்கள் முன்னிலையில் அதிகாரி ஒருவர் எட்டி உதைக்கும் பொழுது அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.