முதலையிடம் தப்பித்து சிறுத்தையிடம் சிக்கிய மான் - பதறவைக்கும் வீடியோ
Crocodile Leopard Deer Viral Video: முதலையின் பிடியில் இருந்து போராடி தப்பித்த மானுக்கு, புதருக்கு பின்னால் என்ட்ரி கொடுத்து அதிர்ச்சியளிக்கும் சிறுத்தையின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நினைவில் காடுள்ள மிருகம், மனிதன் என கூறப்படுவது உண்டு. பல பரிமாண வளர்ச்சியை அடைந்து, தற்போது இயற்கையோடும், வனத்தோடும், மிருகங்களோடும் அந்நியப்பட்டு வாழ்ந்து வருகிறோம். அப்படி இருந்தாலும், ஆறு, மலை, மரம், செடி, கொடி ஆகியவற்றை பார்த்தால் மனிதர்கள் ஒரு வித்தியாசமான உணர்வை பெறுகின்றனர்.
அந்த வகையில், விலங்குகள் வேட்டையாடும் வீடியோ, விலங்குகளின் சேட்டைகள், விலங்குகளின் திட்டங்கள் ஆகியவை குறித்து அறிந்துகொள்வதற்கும் மனிதர்கள் விரும்புகின்றனர். எனவேதான், பல தொலைக்காட்சி சேனல்கள், விலங்குகள் சார்ந்த நிகழ்ச்சியை அதிகம் ஒளிபரப்புகின்றன. அதற்கென பிரத்யேக சேனல்களும் இருக்கின்றன. தற்போது, இணையத்திலும் விலங்குகளின் வீடியோக்கள் குவிந்துள்ளன. அதை பல்லாயிரக்கணக்காணோர் கண்டு களிக்கின்றனர்.
மேலும் படிக்க | தாங்க முடியாத அலப்பறை, வேற லெவலில் தாக்கிய குரங்குகள்: வீடியோ வைரல்
இந்நிலையில், வன விலங்குகளின் பசியும், வேட்டையையும் எடுத்துக்கூறும்படி, அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. யூ-ட்யூபில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், மான் ஒன்று குட்டையில் உள்ள முதலையிடம் மாட்டிக்கொள்கிறது. மானின் கால்களை தொடர்ந்து, அந்த மானின் காலை முதலை வலுவாக பிடித்துவிட்டது. இருப்பினும், அந்த மான் தொடர்ந்து முயன்று வெளியே வர பார்க்கிறது. மீண்டும் மீண்டும் அந்த முதலை மானை தண்ணீருக்குள் மூழ்கடிக்க பார்த்தது.
சில நிமிடங்களில் கொஞ்சமாக கொஞ்சமாக முதலையின் பிடியில் இருந்து விடுபட்ட அந்த மான், தண்ணீரை விட்டு மணல் மேட்டுக்கு ஏறியது. உடலில் இருந்த நீரை உதறிவிட்டு, இரண்டு நொடிகள் நிதானித்த நிலையில், அதன் இடதுபுறத்தில் இருந்து ஒரு சிறுத்தை புலி பாய்வதை பார்த்த அந்த மான் மீண்டும் ஓட்டமெடுக்க தொடங்கியது. ஆனால், சிறுத்தை மிக அருகில் இருந்ததால், உடனே அந்த மான் அதனிடம் சிக்கிவிட்டது. இறுதியில், அந்த மானை கொன்று வாயில் கவ்வியவாறு, சிறுத்தை புலி மரத்தின்மீது ஏற அங்கு நின்றுகொண்டிருந்த மான் கூட்டம், தங்கள் கூட்டாளி கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்தன.
இந்த வீடியோ, 2 ஆண்டுகளுக்கு முன் Latest Sightings என்ற யூ-ட்யூப் சேனலில் வெளியாகி, 9 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும், 35 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. தற்போது, இந்த வீடியோ திடீரென வைரலாகி, நெட்டிசன்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. காடு என்பது ஒவ்வொரு நொடியும், தனது உயிரை காப்பற்ற வேண்டிய கட்டாயத்தை உயிரினங்களுக்கு அளித்துள்ள ஆபத்தான மற்றும் ஆழம் பொதிந்த இடம் என மனிதர்களுக்கு கூறும் வகையில் இந்த வீடியோ அமைந்திருப்பாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Viral Video: என்ன கொடுமை சார் இது... சிங்கங்களை ஓட விரட்டிய எருமை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ