Viral Video: துணையை ஆக்கிரோஷமாக தாக்கும் முதலை... காட்டில் நடக்கும் குடும்ப சண்டை!

Crocodile Viral Video: தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில்,  நீர் நிலையின் அருகில் இரு  முதலைகள் ஆக்கிரோஷமாக தாக்கிக் கொள்வதைக் காணலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 25, 2023, 08:40 PM IST
  • முதலையும் அதன் துணையும் கரையில் இரை தேடுவதைக் காணலாம்.
  • பசி காரணமா அல்லது வேறு காரணத்தினால் தனக்குள் சண்டையிடுகிறதா என தெரியவில்லை.
  • தாக்கப்பட முதலையும் ஆக்ரோஷமாக பதில் தாக்குதல் நடத்துகிறது.
Viral Video: துணையை ஆக்கிரோஷமாக தாக்கும் முதலை... காட்டில் நடக்கும் குடும்ப சண்டை! title=

காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இவற்றில் சிலவற்றைக் கண்டால் நமக்குப் பயமும், சிலவற்றைப் பார்க்கும் போது நமக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில்,  நீர் நிலையின் அருகில் இரு  முதலைகள் ஆக்கிரோஷமாக தாக்கிக் கொள்வதைக் காணலாம்.

முதலைகள் நீரிலும் நிலத்திலும் கடுமையாக தாக்கும் திறன் பெற்றவை. வாய்ப்பு கிடைத்தவுடன் எந்த மிருகத்தையும் வெற்றிகரமாக தாக்கி நொடியில் இரையாக்கி விடும். அதன் பிடியில் இருந்து தப்புவது மிகவும் கடினம். ஆனால், தற்போது வைரலாகி வரும் வீடியோவில், முதலை, தனது துணையையே தாக்கும் காட்சி நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது. அதில் தனது துணையின் வாலை தனது வாயால் முதலை கவ்விக் கொண்ட காட்சி மனதை பதற வைக்கும். சமூகவலைத்தளங்களில் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

வைரலாகும் வீடியோவைக் கீழே காணலாம்:

வீடியோவில், முதலையும் அதன் துணையும் கரையில் இரை தேடுவதைக் காணலாம். ஆனால் பசி காரணமா அல்லது வேறு காரணத்தினால் தனக்குள் சண்டையிடுகிறதா என தெரியவில்லை... ஒரு முதலை தனது துணையை தாக்கத் தொடங்கியது. ஒரு அதிர்ச்சியான காட்சியில், முதலை எதிர்பாராத விதமாக தனது துணையை நெருங்கி திடீரென அதன் தாடையினால் வாலைக் கவ்விப் பிடித்ததைக் காணலாம்.

தாக்கப்பட முதலையும் ஆக்ரோஷமாக பதில் தாக்குதல் நடத்துகிறது. ஒரே அடியில் கழுத்துக்குக் கீழே முதலையைப் பிடித்து புரட்டி எடுக்க தொடங்கியது. முதலையின் வீடியோ @beautiful_post_4u  என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. முதலைகளின் இடையேயான சண்டையின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | Dolphin Viral Video: வானவில்லைத் தொடும் டால்பினின் ஹை ஜம்பிங் வீடியோ வைரல்

மேலும் படிக்க | Viral Video: இதெல்லாம் ரொம்ப ஓவர்! யானை மரத்தை சாய்த்த காரணம் தெரியுமா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News