பாம்பை கழுத்தில் சுற்றித் திரியும் சிறுவர்கள்... வினோதமான பாம்பு திருவிழா - அதிர்ச்சி அளிக்கும் வைரல் வீடியோ
Snake Fair Viral Video: பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் கையில், கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு வினோதமான திருவிழாவை கொண்டாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Snake Fair Viral Video: இந்தியாவில் மட்டும் சுமார் 300 வகை பாம்புகள் காணப்படுவதாக கூறப்படுகிறது. அதில் சுமார் 60 வகை பாம்புகள் விஷத்தன்மை வாய்ந்தது எனவும் கூறப்படுகிறது. எனவேதான் இந்தியாவில் மற்ற நாடுகளை விட விஷப்பாம்புகள் கடித்து மனிதர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது எனலாம். அதுவும் மழைக்காலங்களில் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதும் வாடிக்கையாக நிகழும்.
அதே வேளையில்தான், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாம்புகளை தெய்வாகமாக வழிபடும் போக்கும் உள்ளது. வேண்டுதலுக்கு பாம்பு புத்திற்கு பால் ஊற்றுவதில் இருந்து தொடங்கி நாக தோஷத்தை தீர்க்க பரிகாரம் செய்வது வரை பாம்பு சார்ந்த வழிபாடு தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய துணைக்கண்டம் முழுவதும் விரிந்துகிடக்கிறது. அந்த வகையில், பிகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள சிங்கியா கட் கிராமத்தில் மிகவும் தனித்துவமான மற்றும் ஆச்சர்யப்பட வைக்கும் பாம்பு திருவிழா நடைபெறுகிறது.
பிகாரின் பாம்பு திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் நாக பஞ்சமியில் இங்கு இந்த பாம்பு திருவிழா (அ) நாக திருவிழா நடைபெறும் எனலாம். இந்தாண்டு ஆக. 9ஆம் தேதி நாக பஞ்சமி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். உள்ளூர், உள் மாநில மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து பல்வேறு பக்தர்கள் இதில் கலந்துகொள்வார்கள். இந்த திருவிழாவின் சிறப்பு, ஒவ்வொரு பக்தரும் தங்களின் கைகளில், கழுத்தில் என உடலில் முழுவதும் பாம்புகளை வைத்திருப்பதை பார்க்க முடியும். இந்த திருவிழா அம்மக்களின பாம்புகள் சார்ந்த நம்பிக்கை மற்றும் வழிபாடு சார்ந்ததாகும்.
மேலும் படிக்க | நாகப்பாம்பை கொத்த சென்ற தேள்! இறுதியில் என்ன ஆனது? வைரலாகும் வீடியோ!
இந்த திருவிழா அங்குள்ள ஒரு ஆற்றில் இருந்து தொடங்குகிறது. உள்ளூர் பூசாரி அந்த ஆற்றில் மூழ்கி அதன் உள்ளிருந்து பாம்புகளை எடுத்து வெளியே வீசுவார். இந்த காட்சியை பார்க்க பிரமிப்பாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். அந்த பாம்புகளை மக்கள் தங்களின் கழுத்துகளில் சுற்றிக்கொள்வார்கள். கையில் எடுத்துக்கொள்வார்கள். அந்த திருவிழா முடியும் வரை ஒவ்வொருவரும் பாம்புகளை கையில் வைத்திருப்பார்கள், எங்கு போனாலும் அதை அன்று முழுவதும் எடுத்துச் செல்வார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாம்பை வழிபடுவது மட்டுமின்றி அதனை அசால்ட்டாக கையாள்வார்கள்.