சின்ன பாம்பு... ஆனா வாய் பெருசு... அசால்ட்டாக பெரிய முட்டையை முழுங்கும் வைரல் வீடியோ
Snake Viral Video Latest: தனது தலையை விட பெரிய முட்டை ஒன்றை பாம்பு அசால்ட்டாக முழுங்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Snake Viral Video Latest: இயற்கை எப்போதுமே நமக்கு வியப்பை தருவது நிறுத்தவே நிறுத்தாது. அழகிய பௌர்ணமி நிலா, சொக்கவைக்கும் மஞ்சள் வெயில் மாலை, அடைமழையில் எட்டிக்கும் பார்க்கும் வெயிலால் வரும் வானவில் என இயற்கை காட்டும் அழகிய காட்சிகளை நம்மால் வியக்காமல் இருக்கவே முடியாது. இதை இயற்கையோடு ஒன்றி பிணைந்திருக்கும் விலங்குகளிடமும் நம்மால் பார்க்க முடியும். விலங்குகளின் பல்வேறு செயல்கள் நமக்கு வியப்பாகவும், வினோதமாகவும் இருக்கும்.
அந்த வகையில், பாம்பு ஒன்று அதன் தலையை விட பெரிதா இருக்கும் முட்டை ஒன்றை விழுங்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்ப்போரை வியப்பின் உச்சிக்கே கொண்டுசெல்கிறது. அந்த பாம்பு மிகச் சிறியதாக இருக்கிறது. அங்கு ஒருவர் தனது கையில் அந்த பாம்பை ஒப்பிடும்போது பெரிய அளவிலான முட்டையை தன் கையில் வைத்திருக்கிறார். அந்த பாம்பு முட்டைய நோக்கி ஊர்ந்து வந்து அவரது கையில் இருக்கும் முட்டையை லாவகமாக ஒரே முயற்சியில் முழுங்குகிறது.
சின்ன சைஸ் பாம்பு...
அந்த முட்டையை முழுங்க தாடையை பெரியளவுக்கு நீட்டித்து பாம்பை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இயல்பு நிலையில் அதன் அளவும் அந்த முட்டையை முழுங்கும்போது பாம்பின் அளவையும் பார்க்கும்போது எல்லோருக்குமே வியப்பு மேலிடும். அந்தளவிற்கு எப்படி அந்த பாம்பின தாடை செயல்படுகிறது என்ற கேள்வியும் நெட்டிசன்களிடம் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | மணமகளின் ஷாக்கிங் நடனம்.. அலறிய மணமகன், அரண்டு போன உறவினர்கள்: வைரல் வீடியோ
இந்த வீடியோ @AMAZINGNATURE என்ற X பக்கத்தில் கடந்த அக். 18ம் தேதி இரவு 10.45 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில்,"ஒரே முயற்சியில் பாம்பு அதன் தலையை விட பெரிய முட்டையை முழுங்குகிறது"என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ தற்போது வரை 6 லட்சம் வியூஸை தாண்டியுள்ளது. 300க்கும் மேற்பட்ட கமெண்ட்கள் வந்துள்ளன. மேலும் கமெண்ட் பிரிவில் ஒருவர் பாம்பின் இந்த செயலை விவரித்துள்ளார்.