மணமகளின் ஷாக்கிங் நடனம்.. அலறிய மணமகன், அரண்டு போன உறவினர்கள்: வைரல் வீடியோ

Viral Video: சமீபத்தில் வைரல் ஆகியுள்ள ஒரு திருமண வீடியோ மிகவும் வித்தியாசமானது. இதில் மகிழ்ச்சி மிகுதியில் மணமகள் மேளம் வாசிக்கும் நபருடன் நடனமாடத் தொடங்குகிறார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 22, 2024, 11:53 AM IST
  • இந்த வித்தியாசமான வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @vishakha_chaudhary_07 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு இதுவரை 2 லட்சத்து 79 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளும், ஏராளமான வியூஸ்களும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் (Netizens) இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
மணமகளின் ஷாக்கிங் நடனம்.. அலறிய மணமகன், அரண்டு போன உறவினர்கள்: வைரல் வீடியோ title=

Viral Video: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. 

திருமணங்களின் பல வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் இவற்றில் சில திருமண வீடியோக்கள் (Wedding Viral Video) மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன. இவை உடனே பலரால் பகிரப்பட்டு வைரலும் ஆகின்றன. திருமண வீடியோக்களில் நாம் பல வித காட்சிகளை காண்கிறோம். திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. 

முன்னர் திருமணங்களில் மணமகனும், மணமகனும் வெட்கத்துடன் அமர்ந்திருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த காலத்தில் பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு, ரிசப்ஷன் ஆகிய திருமண நிகழ்வுகளில் மணமக்கள் தங்கள் வாழ்வின் மிக முக்கியமான நாளை கொண்டாடும் வகையில் சந்தோஷமாக  நடனம் ஆடுவதை காண முடிகின்றது. 

பொதுவாக மணமகள் தனது உறவினர்களுடன், நண்பர்களுடன், மணமகனுடன் என இப்படி யாருடனாவது நடனம் ஆடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் வைரல் ஆகியுள்ள ஒரு வீடியோ மிகவும் வித்தியாசமானது. இதில் மகிழ்ச்சி மிகுதியில் மணமகள் மேளம் வாசிக்கும் நபருடன் நடனமாடத் தொடங்குகிறார். 

முதலில் இது சாதாரணமாக தோன்றினாலும் மணமகளின் வேகத்தையும் உற்சாகத்தையும் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். யார் முகத்திலும் சிரிப்பை காணவில்லை. மணமகளின் ஆட்டம் அவர்களுக்கு வினோதமாகத் தோன்றுகிறது. மணமேடை முழுவதும் அவர் சுற்றி சுற்றி ஆடுகிறார். அவர் கீழே அமர்ந்து ஆடத் தோடங்கும் போது, அவரை பிடிக்க மணமகன் ஓடி வருகிறார்.

மேலும் படிக்க | எனக்கு பயம் இல்லை! பாம்புடன் ஜாலியாக விளையாடும் சிறுமி! வைரல் வீடியோ!

மணமகளின் வினோதமான நடன வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வித்தியாசமான வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @vishakha_chaudhary_07 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை 2 லட்சத்து 79 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளும், ஏராளமான வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் (Netizens) இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க | 12வது மாடியில் குதிக்க பார்த்த இளைஞர்!! திக் திக் வைரல் வீடியோ..

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News