நபரின் மூக்கை கடித்து குதறிய கொடூர பாம்பு, திக் திக் வைரல் வீடியோ
snake Bites Man Nose Video: நபரின் மூக்கை பதம் பார்த்த கொடூர பாம்பின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த முழு விபரங்களை கீழே காணுங்கள்
பாம்பு வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென தனி மவுசு. விலங்குகளின் வைரல் வீடியோவை காண தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் சுவாரஸ்யமான இணைய உலகத்தில் சமீப காலங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அதிலும் பாம்பு வீடியோவுக்கு அதிகளவு மவுசு உள்ளது. அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டது. அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க | Viral Video: தும்பிக்கையில சிக்க மாட்டேங்குதே... கூடைப்பந்துடன் போராடும் குட்டியானை!
தற்போது வைரலாகி வரும் வீடியோவில் நபர் ஒருவர் மலைப்பாம்புக்கு ஆசையுடன் முத்தமிட முயல்வதை நாம் காணலாம். அப்போது அந்த மலைப்பாம்பு கடுப்பில் அந்த நபரின் மூக்கை கடித்து குதறிவிடுகிறது. பின்னர் அந்த பாம்பிடமிருந்து அந்த நபரை மீட்க அங்கிருந்தவர்கள் வெகு நேரம் போராடினார். இந்த வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
திக் திக் வீடியோவை இங்கே காணுங்கள்:
சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை @wild_animal_pix என்கிற இனஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | மேடையிலேயே இப்படியா? தாலி கட்டிய உடனேயே மணமக்கள் செய்த வேலை, வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ