மேடையிலேயே இப்படியா? தாலி கட்டிய உடனேயே மணமக்கள் செய்த வேலை, வைரல் வீடியோ

Funny Marriage Video: இணையவாசிகளை வியக்க வைக்கும் ஒரு திருமண வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. இதில் மணமக்களுக்கு இடையில் கடுமையான சண்டை நடக்கின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 25, 2023, 12:36 PM IST
  • கோவமடைந்த மணமகள் மணமகனை அடிக்கத் தொடங்குகிறார்.
  • இதனால் மணமகன் அதிக கோபம் அடைகிறார்.
  • அவரும் மணமகளை அடிக்கிறார்.
மேடையிலேயே இப்படியா? தாலி கட்டிய உடனேயே மணமக்கள் செய்த வேலை, வைரல் வீடியோ

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

இந்திய திருமணங்களில் பல விதமான சடங்குகள் நடக்கின்றன. திருமணம் தொடர்பான வீடியோக்களில் பல்வேறு வகையான காட்சிகள் காணப்படுகின்றன. சில சமயம் மேடையிலேயே மணமகனுக்கும், மணமகளுக்கும் இடையே சண்டை தொடங்கிவிடும். சில சமயங்களில் மணமக்களின் சகோதர சகோதரிகளுக்கு இடையே வேடிக்கையான சண்டைகளும் நடப்பதுண்டு. திருமணம் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 

தற்போது ஒரு வேடிக்கையான திருமண வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இது மற்ற வீடியொக்களை விட மிக வித்தியாசமான உள்ளது. இதில் மணமகனும் மணமகளும் வாழைப்பழத்தை ஊட்டி விடுவது குறித்து இருவருக்கும் சண்டை மூள்கிறது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே திருமண மேடை சண்டைத் தளமாக மாறி விடுகின்றது. வீடியோவில் காணப்படும் விஷயங்கள் மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றன. 

மேலும் படிக்க | 'பண்ணுவியா.. பண்ணுவியா’: மனிதர்களை போல் குட்டியை அடிக்கும் குரங்கு.. ஹோம்வொர்க் பண்ணலியோ? வைரல் வீடியோ!!

மணமகனுக்கும் மணமகனுக்கும் இடையே கடுமையான சண்டை

வைரலாகி வரும் இந்த வீடியோவில் திருமண சடங்குகளுக்காக மேடை அலங்கரிக்கப்பட்டுள்ளதை காண முடிகின்றது. மாலை மாற்றும் சடங்கில் மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொள்கிறார்கள். சிறிது நேரம் கழித்து இனிப்பு, பழங்களை உண்ணும் சடங்கு தொடங்குகிறது.  மணமகன் வாழைப்பழத்தை எடுத்து மணமகளுக்கு ஊட்டத் தொடங்குகிறார். ஆனால் மணமகள் அதை வாங்கிக்கொள்ள மறுக்கிறார். ஆனால் மணமகன் கட்டாயப்படுத்டு அவருக்கு வாழைப்பழத்தை ஊட்டத்தொடங்குகிறார். இதனால் இருவருக்கும் சண்டை தொடங்குகிறது.

கோவமடைந்த மணமகள் மணமகனை அடிக்கத் தொடங்குகிறார். இதனால் மணமகன் அதிக கோபம் அடைகிறார். அவரும் மணமகளை அடிக்கிறார். இதற்கு மணமகளும் பதிலடி கொடுக்க, மணமகன் மேடயை விட்டு இறங்கிவிடுகிறார்.

மணமக்களின் அடிதடி வீடியோவை இங்கே காணலாம்: 

நீங்கள் பல திருமண வீடியோக்களை பார்த்திருப்பீர்கள், ஆனால் இதில் வரும் காட்சிகள் போல பொதுவாக எங்கும் காணப்படுவதில்லை. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில்  kushwaha_vishal9 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு பல வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | நாய்க்குட்டியை கிட்னாப் செய்த குசும்புக்கார குரங்கு: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News