வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாம் இரவில் தூங்கும்போது, சில சமயம் நமக்கு வரும் கனவுகள் நம்மால் நம்ப முடியாத அளவில் இருக்கின்றன. ஆனால், கனவு, கற்பனை என அனைத்தையும் மிஞ்சும் ஒரு சம்பவம் ஒரு பெண்ணுக்கு நடந்துள்ளது. இதை நம்புவது பலருக்கு மிகவும் கடினமாக இருக்கலாம். பொதுவாக, பாம்பென்றாலே மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடி விடுவார்கள். ஆனால், உறக்கத்தில் நாம் அறியாத வண்ணம் ஒரு பாம்பு நம் அருகில் வந்தால் என்ன செய்ய முடியும்? 


அப்படி ஒரு வினோத அனுபவம் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது. அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது 4 அடி நீளமுள்ள பாம்பு ஒரு பெண்ணின் வாய்க்குள் புகுந்தது. இது கேட்பதற்கு நம்ப முடியாமல் இருந்தாலும், இது உண்மையான சம்பவம். ரஷ்ய பெண் ஒருவரின் வாயில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் 4 அடி பாம்பு அகற்றப்பட்ட திகிலூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்தப் பெண் தூங்கச் சென்றபோது, ​​4 அடி நீளமுள்ள பாம்பு வாயில் புகுந்து தொண்டைக்குள் இறங்கியதாக கூறப்படுகின்றது. 


மேலும் படிக்க | நாய்க்கு மசாஜ் செய்யும் பூனை! வைரல் வீடியோ! 


4 அடி நீளமுள்ள பாம்பு பெண்ணின் வாயில் நுழைந்தது


வீடியோவின் துவக்கத்தில், ஆபரேஷன் தியேட்டரில் ஒரு பெண் படுத்திருக்க, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பாம்பை அகற்ற முயற்சிப்பதை காண முடிகின்றது. பெண் மருத்துவர் ஒருவர் நோயாளியின் வாயில் அறுவை சிகிச்சை கருவியை செலுத்தி 4 அடி நீளமுள்ள பாம்பை வெளியே எடுக்கிறார். வெளியே எடுக்கப்பட்ட உடனேயே பாம்பு அவரை தாக்குகிறது. அதிர்ஷ்டவசமாக, மருத்துவர் பாம்பை தூரமாக பிடித்திருந்ததால், அதனால் அவருக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்க முடியவில்லை. 


11 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், மயக்கமாக இருக்கும் பெண்ணின் வாயிலிருந்து மருத்துவர்  பாம்பை எடுப்பதை காண முடிகின்றது. இந்த காட்சி பார்ப்பதற்கு திகிலூட்டும் வகையில் உள்ளது. 


வாய்க்குள் போன பாம்பு: பதற வைக்கும் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:



அந்த வீடியோ @FascinateFlix என்ற பக்கத்தில் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. "பெண் தூங்கிய போது அவர் வாயில் புகுந்த 4 அடி பாம்பை எடுக்கும் மருத்துவர்கள்” என இதற்கு கேப்ஷன் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்வுட்டரில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் 36.9k லைகுகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


இந்த வீடியோவை காண்பவர்களால் இதை நம்ப முடியவில்லை. இப்படி கூட நடக்குமா என்ற ஆச்சரியமே அனைவரையும் ஆட்கொள்கிறது.


மேலும் படிக்க | Viral Video: தத்தளிக்கும் பூனைக் குட்டி; காப்பாற்றிய நாய்... மனதை உருக்கும் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ