பாம்பின் வீடியோ ஓன்று சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஆளுயரப் பாம்பு அந்தரத்தில் பறந்து நடு ரோட்டில் வந்து விழுந்ததைப் பார்த்து அங்கே கூடியிருந்த மக்கள் கூட்டம் சிதறி ஓடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பலருக்கு பாம்பு மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தாலும், பாம்பு பற்றி தெரிந்துகொள்ள பலர் விருப்பம் தெரிவிப்பர். சமூகவலைதளங்களில் பாம்பு குறித்த பல வீடியோக்கள் அவ்வப்போது டிரெண்டாகி வருகிறது. 


ALSO READ | Viral Rescue: காப்பாற்றுவது நல்லதுதான்; ஆனால் அது நாகபாம்பாக இருந்தால்?


அந்த வகையில், தற்போது மக்கள் நிறைந்த பொதுஇடத்தில் பாம்பு ஒன்று தென்பட்டால் எப்படி இருக்கும். ஆம், ஆளுயரப் பாம்பு ஒன்று வானில் இருந்து விழுந்துள்ளது. இதைப்பார்த்த அவ்வழியே சென்ற பொதுமக்கள் அச்சத்துடன் கூட்டமாக கூடிவிட்டார்கள். அங்கே இரண்டு சக்கர வாகனத்தில் வந்து இருந்தவர்கள் எல்லோரும் பாம்பு மேலே விழுந்தால் என்னவாகும் என்று தங்கள் வகனங்களை வந்த வழியே திரும்பி செல்கிறார்கள்.


திடீரென அந்த பாம்பு கேபிள் மின் ஒயரில் இருந்து நழுவி அந்தரத்தில் இருந்து பறந்து கீழே விழுகிறது. பாம்பு கிழே விழுந்ததும் அங்கே இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு தொலைவாக ஓடுகிறார்கள். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலர் அதனை ஷேர் செய்து கருத்துகள் தெரிவித்தும் வருகின்றனர்.பாம்பு கம்பி மீது இருந்த வரை அந்த இடத்தில் தைரியமாக இருந்த பலர் விழுந்த உடன் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.


வீடியோ இதோ:


 



ALSO READ | Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!


ALSO READ | Viral Video: சீறிப் பாயும் நாகப் பாம்பை தண்ணீர் கேனில் அடைத்த மந்திரவாதி..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR