Viral Rescue: காப்பாற்றுவது நல்லதுதான்; ஆனால் அது நாகபாம்பாக இருந்தால்?

பாம்புக்கு உதவ நினைத்த ஒரு இளைஞர், குச்சியை வைத்து பாம்பை வீட்டிற்கு வெளியே தூக்க முயற்சிக்கிறார். ஆனால், அந்த பாம்பு சீறி படமெடுத்து நிற்கும் போது வெலவெலத்துப் போகிறார்...பாம்பு படமெடுக்கும் வைரல் வீடியோ 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 11, 2021, 03:11 PM IST
Viral Rescue: காப்பாற்றுவது நல்லதுதான்; ஆனால் அது நாகபாம்பாக இருந்தால்?   title=

மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்வது தான் இயல்பு. தக்க சமயத்தில் செய்யும் உதவி தலையை காக்கும் என்றும் சொல்வார்கள். காப்பாற்றுவது நல்லது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

ஆனால், இடம், பொருள், ஏவல் தெரியாமல் செய்யும் உதவி பயனற்று போய்விடும். பயனற்று போவது ஒரு புறம் இருக்கட்டும், அது உதவி செய்பவருக்கே உபத்திரவமாக மாறினால் என்ன செய்வது? அதற்கு உதாரணமாக தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு வீடியோவை சொல்லலாம்.

இந்த வீடியோவில் ஒருவர் வீட்டிற்குள் ஒளிந்திருக்கும் பாம்பை காப்பாற்ற முயற்சிக்கிறார். உண்மையில் உள்ளேயிருக்கும் பாம்பு எந்த வகையைச் சேர்ந்தது என்பது அவருக்கு தெரிந்திருக்காது என்பது அவருடைய அதிர்ச்சியைப் பார்த்தாலே தெரிகிறது.

உதவ நினைத்த ஒரு இளைஞர், குச்சியை வைத்து பாம்பை வீட்டிற்கு வெளியே தூக்க முயற்சிக்கிறார். ஆனால், அந்த பாம்பு சீறி படமெடுத்து நிற்கும் போதுதான் அது நாகப்பாம்பு (Cobra) என்று தெரிகிறது.

நாகம் படையெடுத்து சீறுவதைப் வீடியோவில் பார்ப்பவர்களுக்கே பதற்றமாகும்போது, நேரில் இருந்த இளைஞனின் நிலைமை பரிதாபம் தான்…சில விநாடிகள் மட்டுமே இருக்கும் இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்துள்ளனர்.

சரி நாகப்பாம்பு எவ்வளவு விஷமானது? 
இளம் நாகப்பாம்பு ஒன்றே, ஒரு மனிதரைக் கொல்வதற்கு தேவையான விஷத்தை உடலில் கொண்டிருக்கிறது. நாகப்பாம்பு கடித்தால், உயிர் பிழைத்துவிட்டாலும், கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும் அளவுக்கு அதன் உடலில் நஞ்சு இருக்கிறது. 

ALSO READ | Viral Video: சுரங்கங்கள் வழியாக பறக்கும் விமானத்தின் வைரல் வீடியோ

இந்தியாவில் பெரும்பாலான பாம்புக்கடி இறப்புகளுக்கு காரணமான நான்கு விஷ பாம்புகளில் நாகப்பாம்பும் ஒன்றாகும். நாகப்பாம்புகளின் உடலில் காணப்படும் சிறப்பான உறுப்பு தலையில் இருக்கும் ஒரு விரியக் கூடிய தசை தான் அது படமெடுக்கும்போது நாம் பார்க்கும் பகுதியாகும். 

பொதுவாக பாம்புகள் பிறரை தாக்கும் போதோ, தற்காப்புக்காகவோ படமெடுக்கும். நாகப்பாம்பு கடிக்கும் பொழுது 4 முதல் 6 துளிகள் வரையிலான நஞ்சே வெளிப்படும். இதுவே அதன் தாக்குதலுக்கு ஆளாகும் விலங்கு அல்லது மனிதனை கொல்வதற்கு போதுமானதாகும்.

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று சும்மாவா சொன்னார்கள்?

Also Read | ‘Not said by me, thank you’! என்ற ரத்தன் டாட்டாவின் விளக்கத்திற்கான காரணம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News