பிக் பாஸ் வீட்டில் செல்போனை பயன்படுத்தினாரா சோம்? சிக்கிய வீடியோ
தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 12 வாரங்களை கடந்துள்ளது.
தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 12 வாரங்களை கடந்துள்ளது.
இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா மற்றும் அனிதா என பத்து பேர் வெளியேறியுள்ளனர். அந்தவகையில் இந்த பிக்பாஸ் சீசன் (Bigg Boss Tamil) நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது.
ALSO READ | பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு சனம் ஷெட்டி வெளியிட்ட முதல் வீடியோ!
இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே போட்டியாளர்களுக்கும் வெளியுலக இருக்கும் எந்த ஒரு தொடர்பும் இருக்காது. உணவு உடை தங்கும் வசதி இந்த மூன்றைத் தவிர வெளியுலகில் அவர்கள் இந்த எந்த ஒரு சொகுசையும் அனுபவிக்க அனுமதி கிடையாது என்று தான் ரசிகர்கள் பலரும் நம்பி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது டிசம்பர் 26 ஆம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சோம் சேகர் (Som Shekar) செல்போனை பயன்படுத்தி இருந்தார் என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் சோம் சேகர் தலையை குனிந்தபடி தனது தொடைக்கு அருகில் ஏதோ நோண்டி கொண்டு இருந்தார் (இந்த நிகழ்வை 41 நிமிடத்தில் பார்க்கலாம்). நிகழ்ச்சியில் நெட்டிசன்கள் பலரும் சோம் சேகர் செல்போனை நோண்டிக் கொண்டிருந்ததாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
ALSO READ | கொதித்தெழுந்த அனிதா! பதில் கூற முடியாமல் கோபத்துடன் கத்திய ரியோ!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR