கொதித்தெழுந்த அனிதா! பதில் கூற முடியாமல் கோபத்துடன் கத்திய ரியோ!

பிக் பாஸ் 4 இன் முதல் புரோமோ வீடியோவில் அனிதா சம்பத் மற்றும் ரியோ ராஜ் இடையே ஒரு பெரிய சண்டை நடக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 11, 2020, 12:55 PM IST
கொதித்தெழுந்த அனிதா! பதில் கூற முடியாமல் கோபத்துடன் கத்திய ரியோ! title=

பிக் பாஸ் 4 இன் முதல் புரோமோ வீடியோவில் அனிதா சம்பத் மற்றும் ரியோ ராஜ் இடையே ஒரு பெரிய சண்டை நடக்கிறது. மோசமான போட்டியாளராக தேர்வு செய்யப்பட்ட அனிதா மற்றும் ரமேஷ் சிறைக்குச் சென்றார். 

இந்த நிலையில் சற்று முன் வெளியான பிக் பாஸ் 4 (Bigg Boss Tamilமுதல் புரமோவில் சிறையில் இருக்கும் அனிதாவுக்கும் வெளியில் இருக்கும் ரியோவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது. அப்போது பேசிய அனிதா, நிஷாவும் அர்ச்சனாவும் கேம் விளையாடும்போது அர்ச்சனா அழுததால், கேமே ஒரு லெவலில் டவுன் ஆகி விட்டது. அப்போது அது உங்களுக்கு போரிங் என தெரியவில்லை ஆனால் நான் அர்ச்சனாவ பாஸ்ஸி சொன்னது மட்டும் சுவாரசியம் குறைவுனா எப்படி? அதற்கு ரியோ, ‘பிடிக்கலை என்பதற்கு சுவாரஸ்யம் இல்லை என்பதற்கும் வித்தியாசம் உண்டு என்றார். 

ALSO READ | இந்த வாரம் மீண்டும் ஆரி அனிதாவுக்கு ஆப்பு! லவ்பெட் கேங் முடிவு!

அதன்பின் அனிதா (Anitha Sampath), ‘கேப்டன்ஷிப் டாஸ்க்கில் ட்ரை பண்ண நிஷா பெஸ்ட் ஃபெர்மார்மர், கேப்டன்ஷிப் டாஸ்க்கில் வெற்றி பெற்ற நான் வொர்ஸ் பெர்மாரா? என்று கேள்வியை அனிதா கேட்டவுடன், உடனே ’கேப்டன்சியை வைத்து நான் சொல்லவில்லை என்று ரியோ சமாளித்தார். 

அனிதாவின் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய ரியோ (Rio Rajதேங்க்யூ என்று கூறி எஸ்கேப் ஆக முயன்றார். அதற்கு அனிதா கரெக்ட் பாய்ண்ட் பேசும்போது போய்விடுவார் இதுதான் ரியோ என்றார். இந்த வார்த்தையை கேட்ட ரியோ அனிதாவிடம் கோபப்படுகிறார். இதுவே  இன்றைய முதல் புரமோ வீடியோவில் காண்பிக்கபட்டுள்ளது.

ALSO READ | Big Boss 4: பிக் பாஸ் வீட்டிலிருந்து இதுவரை eviction ஆகாதவர்கள் யார்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News