Student beating teacher in school corridor :  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதிலும் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வகுப்பறை வீடியோக்கள் எப்போதும் வைரலாக பரவுவது நாம் அடிக்கடி பார்த்துள்ளோம். ஆனால் ஒரு ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறியவுடன் அவரது சொந்த மாணவர்களால் தாக்கப்பட்டால், அது மிகவும் துரதிர்ஷ்டவசமான விஷயமாகும். இது போன்ற ஒரு வீடியோ தன் தற்போது வெளியாகியுள்ளது. இங்கு ஒரு மாணவன் தன் ஆசிரியரிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உண்மையில், இந்த சம்பவம் புளோரிடாவில் நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிசிடிவி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. புளோரிடாவில் உள்ள பள்ளி ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கு ஒரு மாணவர் வகுப்பின் போது வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்ததை ஆசிரியர் கவனித்தார். இதை வகுப்பறையில் செய்ய வேண்டாம் என்று அந்த ஆசிரியர் கூறியுள்ளார். பல முறை வார்னிங்க கொடுப்பட்டும் அந்த மாணவன் அதே செயலை செய்துக்கொண்டே இருந்தார். இறுதியாக கடுப்பான ஆசிரியர் அந்த மாணவரிடமிருந்து வீடியோ கேம் கருவியை பறித்துக் கொண்டார். அதன் பிறகு நடந்தது தான் தற்போது இணையத்தில் வைரலாகி வைரலாகி வருகின்றது.


மேலும் படிக்க | Viral Video: சீறிய பாம்பை புரட்டி எடுத்த பூனை! இணையவாசிகளை வியக்க வைத்த வீடியோ!


வீடியோவை இங்கே காணுங்கள்:



மாணவன் ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மாணவனின் கோபம் அதிகமானது. இதனால் கோபமடைந்த மாணவன் தன் ஆசிரியரைத் துரத்துகிறான். இம்முறை அவளை பள்ளி வராண்டாவில் தரையில் தள்ளிவிட்டு அடிக்கத் தொடங்கினார்.


மாணவியின் இத்தகைய செயலை பார்த்த சிலர் ஆசிரியையை காப்பாற்ற ஓடியது இந்த வைரலான வீடியோவில் தெரிகிறது. இதில் ஆசிரியர் பலத்த காயம் அடைந்தார். சம்பவ இடத்திலேயே மாணவனை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோ வைரலானதையடுத்து, சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் இது குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க | மாப்பிள்ளைக்கு திருமணத்தில் கிடைத்த முத்த மழை: யாரு கொடுத்தா தெரியுமா? டிவிஸ்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ