Viral Video: சீறிய பாம்பை புரட்டி எடுத்த பூனை! இணையவாசிகளை வியக்க வைத்த வீடியோ!

பாம்பு என்று சொன்னால் படையே நடுங்கும் என்பது பழமொழி. இதன் உடல் அமைப்பும், சீறிப்பாயும் தன்மையும் எவரையும் பீதியுறச் செய்யும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 3, 2023, 08:17 PM IST
  • பூனை தனது காலால் ஒரு அறை கொடுப்பதை வீடியோவில் காணலாம்.
  • பாம்பை பயமின்றி எதிர்கொள்ளும் பூனையின் வீடியோ நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
  • பாம்பு என்று சொன்னால் படையே நடுங்கும் என்பது பழமொழி.
Viral Video: சீறிய பாம்பை புரட்டி எடுத்த பூனை! இணையவாசிகளை வியக்க வைத்த வீடியோ! title=

பாம்பு என்று சொன்னால் படையே நடுங்கும் என்பது பழமொழி. இதன் உடல் அமைப்பும், சீறிப்பாயும் தன்மையும் எவரையும் பீதியுறச் செய்யும். ஆனால் பாம்புகளை கண்டு அனைவரும் பயப்படுவதில்லை என்பது வேறு உண்மை. இப்போது ராட்சத நாகப்பாம்பு போன்ற கடுமையான விஷப் பாம்புகளை தைரியமாக எதிர்கொள்பவர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் பாம்பு ஒன்றை பூனை ஒன்று துணிச்சலாக சந்தித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது பெரிய ராஜ நாகப்பாம்பு இல்லையென்றாலும், பாம்பை பயமின்றி எதிர்கொள்ளும் பூனையின் வீடியோ நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

தனது இடது பக்கம் வந்த பாம்பை எந்தவித இரக்கமும் இன்றி பூனை கையாளும் காட்சியை வீடியோவில் காணலாம். அருகில் உள்ள கூண்டில் ஊர்ந்து சென்ற பாம்பை பூனை பின்னால் இருந்து பிடித்து இழுத்து வருகிறது. இந்த நேரத்தில் பாம்பு பூனையை மீண்டும் கடிக்க முயற்சிக்கிறது. பாம்பு கடிக்க வாயைத் திறந்து கொண்டு வந்தபோது, ​​பூனை சிறிதும் பயப்படவில்லை.

மேலும் படிக்க | Viral Video: மல்லுக்கட்டும் பூனைக் குட்டிகள்! இது பூனைகளின் மல்யுத்த போட்டி!

வைரலாகும் பாம்பு - பூனை வீடியோவை கீழே காணலாம்:

 

 

பூனை தனது காலால் ஒரு அறை கொடுப்பதை வீடியோவில் காணலாம். பாம்பு அடிபட்டு அந்த இடத்தை விட்டு வெளியேற முயல்வதையும் காணொளியில் காணலாம். இந்த வீடியோ president_republic_oyen என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது. இந்த வீடியோவை ஏற்கனவே 13.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். பெரும்பாலானோர் அந்த வீடியோவின் கீழ் பூனையைப் பாராட்டி கருத்துகளை எழுதியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாம்புகளை விட பூனைகளுக்கு அதிக அனிச்சை செயல் இருப்பதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர், எனவே பாம்பு பூனையால் எளிதில் வெல்லப்படுகிறது என கருத்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News