மாப்பிள்ளைக்கு திருமணத்தில் கிடைத்த முத்த மழை: யாரு கொடுத்தா தெரியுமா? டிவிஸ்ட்

திருமணத்தில் நடனமாடி மனதை கவர்ந்த மாப்பிள்ளைக்கு முத்தம் பரிசாக கிடைத்தது. ஆனால், அதை யார் கொடுத்தார் என்பதில் தான் டிவிஸ்ட் இருக்கிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 07:43 PM IST
மாப்பிள்ளைக்கு திருமணத்தில் கிடைத்த முத்த மழை: யாரு கொடுத்தா தெரியுமா? டிவிஸ்ட் title=

திருமணங்கள் கலாச்சார முறைப்படி நடந்தாலும், அதனுடைய ஸ்டைல் இப்போது வெகுவாக மாறிவிட்டது. நடனம் இல்லாத திருமணத்தை உங்களால் பார்க்க முடியாது. மணப்பெண், மணமகன் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் என எல்லோரும் திருமண மேடையில் நடனமாடி கொண்டாடாத திருமணங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதுதான் இப்போதைய டிரெண்டும்கூட. மண மகளுக்கோ அல்லது மண மகனுக்கோ நடனமாட தெரியவில்லை என்றால் தான் பாவம். ஏனென்றால், தன்னுடைய பார்ட்னர் எல்லோருடனும் சேர்ந்து நடனமாடி குதூகலிப்பதை வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும். 

மேலும் படிக்க | நூற்றுக்கணக்கான Pythonகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட நபர், பதற வைக்கும் வைரல் வீடியோ 

அண்மையில் மணப் பெண் ஒருவர் தன் தோழிகளுடன் நடனமாட, நடனமாட தெரியாத மணமகன் வேடிக்கை மட்டுமே பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவில் மணமகன் பட்டாசாக நடனமாடுகிறார். அவர் ஆடும் நடனத்துக்கு மணமகள் கம்பெனி கொடுக்கவில்லை என்றாலும், வருங்கால கணவர் சூப்பராக ஆடுவதை கண்டு ரசிக்கிறார். மணமகள் மட்டுமல்ல, அங்கிருக்கும் உறவினர்கள் எல்லோரும் மணமகன் சூப்பராக டான்ஸ் ஆடுவதை உற்சாகமாக கண்டு ரசிக்கிறார்கள். கைதட்டியும் அவரை உற்சாகப்படுத்துகின்றனர்.

டான்ஸின் நடுவே, ரோஜாப் பூ ஒன்றையும் திடீரென எடுத்து மணமகளுக்கு மணமகன் பரிசாக கொடுப்பது ஹைலைட்டாக இருக்கும். முன்பே பிளான் பண்ணி யாரோ ஒருவரிடம் கொடுத்துவைத்துவிட்டார் போலும். கரெக்டாக அந்த பூவை வாங்கி கொடுத்து மணமகளை அசத்துகிறார். இதனால் பூரித்துப் போன மணமகள், மேடையேறியதும் மணமகனுக்கு தலையில் முத்தம் கொடுத்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்துகிறார். இதனை மணமகன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த போர்ஷனை மட்டும் வீடியோவில் சேர்க்காமல் கட் செய்துவிட்டு இன்ஸ்டாகிராமில் அந்த புதிய தம்பதி வீடியோவை பதிவிட்டுள்ளனர். 

மேலும் படிக்க | சறுக்கி விளையாடும் ஜாலியெல்லாம் உங்களுக்கு தெரியாது? பாண்டா அடிக்கும் குட்டிக்கரணம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News