குடும்பத்துடன் டூர் ட்ரிப்; சூர்யா, ஜோதிகா வீடியோ வைரல்
Surya Jyothika Viral Video: நடிகர் சூர்யா, மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் டூர் சென்றுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அண்மையில் வெளியான விக்ரம் படத்தில் இவர் நடித்திருந்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் மக்களிடம் அசத்தலான வரவேற்பை பெற்றார். தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நேரத்தில் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த சுற்றுலா அவர் ஜோதிகா, தேவ், தியா ஆகியோருடன் சென்றுள்ளார்.
இந்த நிலையில் மத்திய அமெரிக்கா நாடான கோஸ்டாரிக்காவுக்கு சென்றுள்ள அவர்கள், அங்குள்ள அனைத்து சாகச விளையாட்டுகள் விளையாடுவதுடன், இயற்கை அழகுகளையும் ரசித்து வருகின்றனர். அந்த இடம் பார்ப்பதற்கு கண்ணிற்கு குளிர்ச்சியாக பச்சை பசேலென இருக்கிறது. அங்குள்ள சுற்றுலா தளங்களை குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து வரும் சூர்யா, மனைவி மற்றும் மகளுடன் காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் அங்கு பல்வேறு சாகச விளையாட்டுகளையும் அவர்கள் விளையாடி உள்ளார்.
மேலும் படிக்க | விஜய்யிடம் ஆர்.ஜே. பாலாஜி சொன்ன கதை தெரியுமா?
அந்தவகையில் அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒன்றாக தொகுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஜோதிகா. இந்த வீடியோவை ரீல்ஸாக ஜோதிகா பதிவிட்டுள்ளார். அதில் ‘புர விடா' என்ற கேப்ஷனை குறிப்பிட்டுள்ளார்.