வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் ப்ரத்தியேக வலைதளம் வெளியிட்ட tnGovt!
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தமிழ்நாடு தனியார் வேலை இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in -ஐ அறிமுகம் செய்துள்ளார்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தமிழ்நாடு தனியார் வேலை இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in -ஐ அறிமுகம் செய்துள்ளார்.
தனியார் நிறுவனங்களுக்கும் வேலை தேடும் இளைஞர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக இந்த இணையதளம் செயல்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வேலை தேடுபவர்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இந்த சேவையை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 528-ஆக உயர்வு...
இந்த வலைத்தளத்தின் மூலம், தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் கல்வித் தகுதி, அனுபவம் போன்ற விவரங்களை பதிவு செய்யலாம், அதே நேரத்தில் MSME துறையில் உள்ள நிறுவனங்கள் இந்த தளத்தின் மூலம் காலியிடங்களை பதிவேற்றலாம், பின்னர் மக்களை தகுதி அடிப்படையில் இந்த பணிக்கு நியமிக்கலாம்.
ஏற்கனவே, வழிகாட்டுதல் பணியகத்தால் மாவட்ட அளவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது தமிழக இளைஞர்களுக்கான ஆன்லைன் போர்டலையும் தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
ஆட்டோமொடிவ், BFSI, IT-ITES, லாஜிஸ்டிக்ஸ், உணவு பதப்படுத்துதல், அழகு மற்றும் ஆரோக்கியம், மின்னணுவியல் மற்றும் வன்பொருள், கருவி, கட்டுமானம் போன்ற ஒவ்வொரு துறையிலும் உள்ள பல்வேறு வகை பணியிடங்கள் குறித்த விவரங்களையும் இந்த வலைத்தளம் வழங்குகிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு 2174 தொற்றுகளை பதிவு செய்தது தமிழகம்!...
வேலை தேடுபவர்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள நிறுவனங்களின் பணியிடங்களை தேர்வு செய்தும் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை வகை, பாலினத்தின் அடிப்படையில் வேலைகள் போன்றவற்றை உள்ளிட்டும் உலாவலாம். சேவை வரம்பு மற்றும் கிடைக்கக்கூடிய சிறந்த நிறுவனங்கள் போன்ற விவரங்களும் இந வலை தளத்தில் கிடைக்கின்றன என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.