இந்திய அளவில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ‘தமிழக வேலை தமிழருக்கே’
சமூக வலைதளங்களில் #தமிழகவேலைதமிழருக்கே மற்றும் #TamilnaduJobsForTamils என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் எனக்கூறி தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
அப்பொழுது தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்து பணிகளிலும் தமிழருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதிக அளவில் தமிழர்களே நியமிக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ளது போல, அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தான் முதலில் முன்னுரிமை அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
சமூக வலைதளங்களில் #தமிழகவேலைதமிழருக்கே மற்றும் #TamilnaduJobsForTamils என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. தற்போது இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.