காதலர்களின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் காதலர்களின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. காதலர்களின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. காதலர்களின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ காதல் கதை தொடர்புடையதாகத் தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோயை பார்த்தால் நீங்களும் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். இந்த வீடியோ ஒரு ஆண் மற்றும் பெண்ணை தொடர்புடையது. இதில் பைக்கின் முன் காதலன் முதலில் தனது காதலியை உட்காரச் சொன்னதையும், பிறகு நடந்ததெல்லாம் மிகவும் வேடிக்கையாக இருப்பதையும் பார்க்கலாம். இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது மற்றும் மக்களும் அதை மிகவும் விரும்புகின்றனர்.


மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ


பைக் டேங்கில் அமர்ந்திருக்கும் பெண்
வெளியான வீடியோவில், சாலையில் ஒரு ஆண் ஸ்போர்ட்ஸ் பைக்கில் செல்வதைக் காணலாம். அப்போது அந்த பெண்ணை பின் இருக்கையில் இருந்து எழுந்து பைக்கின் டேங்கில் உட்காரும்படி கூறினார். அந்த பெண்ணும் முன்னால் குதித்து உடனடியாக டேங்கின் மீது அமர்கிறாள். பின்னர் அந்த ஆண் ரேஸ் கொடுப்பதை காணலாம். அதே வேகத்தில் அந்த பெண்ணும் தனது உயிரையு பணயம் வைத்து தடுமாற ஆரம்பித்தாள். ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம். சிறிது தூரம் சென்றதும் ஒரு போலீஸ்காரர் அவர்களை தடுத்து நிறுத்தியதைக் காணலாம். அதன் பிறகு நடந்ததை நீங்களே பாருங்கள். 


வீடியோவை இங்கே பார்க்கவும்



வீடியோவின் கடைசி காட்சி மிகவும் வேடிக்கையாக உள்ளது. ஆனால், மறுபுறம் போக்குவரத்து விதிகளை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்பதற்கும் இதிலிருந்து பாடம் கற்பிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமிலும் punjabi_industry__ என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு நெட்டிசன்களும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ