இளைஞனை சின்னபின்னமாக்கிய சுறா.. மனம் பதற வைக்கும் வீடியோ!
ஒரு ஹாலிவுட் படத்தின் நேராக ஒரு காட்சியில், எகிப்தில் உள்ள செங்கடல் ரிசார்ட் ஒன்றின் அருகே 23 வயது இளைஞனை தந்தையின் முன்னே ஒரு சுறா சின்னபின்னமாக்கி கொன்றது
சமூக ஊடகத்தில் தினமும் பகிரப்படும் எண்ணிலங்காத வீடியோக்களில் சில வீடியோக்கள் மட்டுமே வைரலாகின்றன. அதிலும் விலங்குகளின் தாக்குதல் குறித்த வீடியோ என்றால் கேட்கவே வேண்டாம். அது போன்ற வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஒரு ஹாலிவுட் படத்தின் நேராக ஒரு காட்சியில், எகிப்தில் உள்ள செங்கடல் ரிசார்ட் ஒன்றின் அருகே 23 வயது இளைஞன் ஒரு சுறாவால் அடித்துக் கொல்லப்பட்டான். இணையத்தில் பரவும் ஒரு வீடியோவில், ஒரு நபர் கடலில் நீந்திச் செல்வதைக் காணலாம். அவர் கடலில் நீந்திச் செல்லும் போது, சுறா ஒன்று அவரைச் சுற்றி வந்து மீண்டும் மீண்டும் தாக்குவதையும் காணலாம். பின்னர் அந்த சுறா அவரை இழுத்துச் செல்கிறது.எகிப்தின் பிரபலமான ஹர்காடா (Hurghada) நகரில் சம்பவம் நேர்ந்தது. கொடிய தாக்குதலின் போது இறந்தவரின் தந்தை மற்றும் காதலி அருகில் இருந்ததாக கூறப்படுகிறது, இது கரையில் இருந்து படமாக்கப்பட்டது. தன் மகன் உயிருக்குப் போராடியபோது அவனது தந்தை ஒன்றும் செய்ய முடியாமல் பரிதவித்தப்படி உதவியின்றி நின்றார்.
அந்த நபரின் மரணத்தை எகிப்து சுற்றுச்சூழல் அமைச்சகம் ஃபேஸ்புக் பதிவு மூலம் உறுதி செய்துள்ளது. "கடற்கரைக்குச் சென்றவர் மீது புலி சுறா தாக்கியது ... அவரது மரணத்திற்கு வழிவகுத்தது" என்று அமைச்சகம் மேலும் விவரங்களை வழங்காமல் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஹுர்காடா நகரைச் சுற்றியுள்ள கடற்கரையின் 74-கிலோமீட்டர் (46-மைல்) நீளம் ஞாயிற்றுக்கிழமை வரை அதிகாரிகளால் மூடப்பட்டது. பின்னர், தாக்குதலுக்கான காரணத்தை கண்டறிய ஆய்வகத்தில் பரிசோதனைக்காக சுறா பிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வைரலாகும் வீடியோவைக் கீழே காணலாம்:
அந்நாட்டின் ஊடக நிறுவனமான TASS இன் படி, உள்ளூர் ரஷ்ய தூதரகம் அந்த நபர் போபோவ் வி என அடையாளம் காணப்பட்டதாகக் கூறினார், செங்கடலின் கடற்கரையில் அமைந்துள்ள ஹுர்காடா கடற்கரை ரிசார்ட்டில் தங்கியிருந்தபோது இறந்தார். அவர் 1999 ஆண்டில் பிறந்த நபர் என தூதரக அளித்துள்ள தகவல்கள் கூறுகின்றன. மேலும் போபோவ் ஒரு சுற்றுலாப் பயணி அல்ல என்றும் அவர் எகிப்தில் நிரந்தரமாக வசித்து வருவதாகவும் வோர்பேவ் கூறியதாக TASS தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | அரிதான வெள்ளை நிறப் பாம்புக்கு முத்தமிட்ட நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ
இந்நிலையில், செங்கடலின் கடற்கரைகளில் நீந்துவோருக்கு அதிகபட்ச பாதுகாப்பைத் தந்து சுறா மீன் தாக்குதலைத் தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எகிப்தின் சுற்றுப்புற அமைச்சர் கூறினார். எகிப்தின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அங்குள்ள கடல்களில் நீந்துவதையும் கடல் சார்ந்த நடவடிக்கைகளையும் அடுத்த 2 நாள்களுக்குத் தடை செய்துள்ளது.
சுறா என்றழைக்கப்படும் சுறா மீன் வேகமாக நீந்த வல்ல பெரிய மீன் வகைகளில் ஒன்றாகும். இவை கூர்மையான பல பற்களைக் கொண்டுள்ளன. சுறாக்கள் மிகச் சிறந்த மோப்பத் திறனைக் கொண்டுள்ளன. பத்து இலட்சம் துளிகளில் ஒரு துளி இரத்தம் இருந்தாலும் இவற்றால் கால் மைல் தொலைவில் இருந்து கூட முகர்ந்து விட முடியும். சுறாக்களின் கேள்திறனும் அதிகம்; நுண்ஒலிகளைக் கேட்கும் திறன் பெற்றவை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ