திரிலிங்கான அனுபவம் வேண்டும் என்றால் சுற்றுலா செல்ல வேண்டும். அப்போது தான் புதுபுதுப்பு அனுபவம் கிடைக்கும். எதிர்பார்க்காத விஷயங்களும் நடக்கும். அப்படி தான் இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவிலும் சுற்றுலா பயணிகளுக்கு நடந்திருக்கிறது. சிங்கம், புலி பார்க்கலாம் என போனவர்களுக்கு, நாங்களும் கூட வர்றோம் என ரெண்டு சிங்கங்கள் வந்தது தான் அவர்களின் அதிர்ச்சி கலந்த வியப்புக்கு காரணம். காட்டுக்குள் இருந்த இரண்டு சிங்கங்கள் சுற்றுலா பயணிகள் வந்த ஜீப்பை பார்த்ததும், அதன் மீது ஓடி ஏறிவிட்டன. இதனால், திரிலிங் ரைடு போன சுற்றுலா பயணிகளுக்கு அந்த நிமிடங்கள் ஜர்க் ஆக வைத்துவிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கீழே வர அடம்பிடித்த பூனை..காதை பிடித்து இழுத்து செல்லும் இன்னொரு பூனை! வைரல் வீடியோ..


நேச்சர் அமேசிங் என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவை நீங்கள் பார்த்து ரசிக்கலாம். அதில், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கம்பிகள் பொருத்திய சவாரி ஜீப்பில் காட்டுக்குள் விலங்குகளை பார்க்க சென்றிருக்கின்றன. இரண்டு ஜீப்பில் சென்றபோது, ஓர் இடத்தில் நிறுத்தி அருகாமையில் இருந்த சிங்க கூட்டங்களை பார்த்து ரசித்தனர். அப்போது திடீரென இரண்டு சிங்கங்கள் அந்த சவாரி ஜீப் மீது ஏறிக் கொண்டன. அதனை இன்னொரு ஜீப்பில் இருந்தவர்கள் படம் பிடிக்க, சவாரி ஜீப்பில் இருந்து இறங்க மாட்டோம் என அடம்பிடிக்கும் வகையில் சிங்கங்கள் நின்று கொண்டன. அதில் ஒரு சிங்கம் ஜீப் மேலே படுத்தே விட்டது.


டூரிஸ்டுகள் ஜீப் மீது சவாரி செய்யும் சிங்கங்கள் வீடியோ : 



காட்டுக்குள் அடிக்கடி சவாரி சென்ற அனுபவம் இருந்ததால் அந்த ஜீப்பை ஓட்டிய ஓட்டுநர், எந்தவித பயமும் இல்லாமல் சிங்கங்கள் ஜீப் மீது இருக்கும்போது சில அடி தூரம் ஓட்டிச் சென்றார். ஜீப்பில் இருந்த சுற்றுலா பயணிகளுக்கும் திரிலிங்கான ரைடாகவும், ஜர்க் ரைடாகவும் அமைந்தது. ஆப்பிரிக்காவில் இப்போதும் சுற்றுலா செல்பவர்கள் வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா செல்லலாம். அதற்கு அனுமதி உண்டு. சில இடங்களில் வேட்டையாடவும் அனுமதி இருக்கிறது. அதனாலேயே உலகம் முழுவதும் இருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம். அதனாலேயே ஆப்பிரிக்காவில் இருந்து பல திரிலிங்கான இதுபோன்ற வீடியோக்களும் அடிக்கடி இணையத்தில் வைரலாகின்றன.  


மேலும் படிக்க | கோவிலில் உண்டியல் காணிக்கையை திருடும் நபர்! வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ