வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளின் வீடியோகளுக்கென சமூக ஊடகங்களில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. வன விலங்குகளின் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிரப்பட்டு வைரல் ஆகின்றன. இவற்றில் சிலவற்றை பார்த்தால் நம் கண்களையே நம்மால் நம்ப முடியாமல் போகலாம். சில நம்மை வியக்க வைத்தாலும் சில வீடியோக்கள் நம்மை அச்சத்திலும் பீதியிலும் ஆழ்த்துகின்றன. அப்படி ஒரு திகிலூட்டும் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்தால் நமக்கு ஒரு பக்கம் வியப்பாக இருந்தாலும், ஒரு பக்கம் அச்சமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. 


புலியுடன் விளையாடும் சிறுவன்


இந்த வீடியோவில் ஒரு சிறுவன் ஒரு புலியுடன் விளையாடுவதை காண முடிகின்றது. புலி ஒரு பயங்கரமான, ஆபத்தான காட்டு விலங்காகும். இப்படி இருக்க ஒரு சிறுவன் அதனுடன் விளையாடுவதை காண ஆச்சரியமாக உள்ளது. இந்த வீடியோ அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. 


புலிக்கும் சிறுவனுக்கும் இடையேயான நட்பு 


வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஒரு சிறுவனும் புலியும் கொஞ்சி விளையாடுவதை காண முடிகின்றது. முதலில் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே வருகிறது. அங்கு ஒரு சிறுவன் நின்ருகொண்டு இருக்கிறார். அவரை பார்த்தவுடன் புலி பாய்ந்து அவரை கட்டிக்கொள்கிறது. புலிக்கு அந்த சிறுவன் மேல் இருக்கும் பாசம் இந்த பாய்ச்சலிலேயே தெரிகிறது. சிறுவனும் புலியை கெட்டியாக கட்டிக்கொள்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் தழுவியபடி நட்பையும் பாசத்தையும் பரிமாறிக்கொள்கிறார்கள். இந்த காட்சி காண்பதற்கு மிக வித்தியாசமாக உள்ளது. 


மேலும் படிக்க | நண்பரை காப்பாற்ற போராடாடும் நரி... இறுக்கிப் பிடித்த மலைப்பாம்பு - வைரலாகும் சண்டை காட்சி!


ஆனால் இப்படிப்பட்ட செயல்கள் மிக ஆபத்தானவை. இந்த வீடியோவை பார்த்தால், அந்த புலி சிறுவனுக்கு பழக்கப்படட் புலியாக தோன்றுகிறது. சில நாடுகளில் புலிகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் வழக்கமும் உள்ளது. அப்படி இந்த புலியும் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட புலியாக இருக்கலாம். எனினும், என்னதான் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டாலும், புலி போன்ற விலங்குகளுடன் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது மிக ஆபத்தானது. புலியின் மனநிலை எப்போது வேண்டுமானால் மாறலாம். பொதுவாகவே வன விலங்குகளின் மனநிலை திடீரென மாறி அவை ஆக்ரோஷமான வடிவை எடுக்கின்றன. 


திகிலூட்டும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோ இணையத்தில் வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் nouman.hassan1 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு பல லட்சம் வியூசும் பகிர்வுகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். இதில் ஏராளமனோர் இந்த வீடியோ எடுத்த நபரையும் அந்த சிறுவனின் பெற்றோரையும் விமர்சித்துள்ளனர். 'இது மரணத்துக்கு அழைப்பு விடுப்பது போன்ற செயல்' என சிலர் கமெண்ட் செய்துள்ளனர். 'இந்த சிறுவனின் பெற்றோர் எங்கே? அவர்கள்தான் சிறுவனுக்கு அறிவுரை கூற வேண்டும்.. இது பொறுப்பற்றதனம்' என ஒரு பயனர் காட்டமாக விமர்சித்துள்ளார். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | சிறு வயதை நினைப்படுத்தும் யானைக்குட்டிகளின் சண்டை வீடியோ! மனம் மயக்கும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ